மாய மான்
மொழிபெயர்ப்புச் சிறுவர் கதை
தமிழாக்கம் – சரவணன் பார்த்தசாரதி
புக்ஸ் ஃபார் சில்ரன்,சென்னை +91 944960935
விலை ₹ 45/.
6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான சுவாரசியமான வண்ணப் படக்கதை. ஃபையானா சொலாஸ்கோ (FAINNA SOLASKO) ஆங்கிலத்தில் எழுதிய கதையைத் தமிழில் பெயர்த்துள்ளார், ஆசிரியர் சரவணன் பார்த்தசாரதி.
இரு சகோதரர்கள் வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குச் சென்று வெவ்வெறு திசைகளில் பயணம் செய்கிறார்கள். போகும் வழியில் அண்ணன் ஆளரவமற்ற கோட்டையையும், அழகான பெண்ணொருத்தியையும் பார்க்கிறான். அதிசய வெள்ளை மானை பிடிக்கச் சென்ற அவள் அப்பா உட்பட, அனைவரும் பாறைகளாக மாறிவிட்ட செய்தியை அவள் சொல்கிறாள். அவர்களை மீட்கச் சென்ற அண்ணனும், சூன்யக்காரியின் சூழ்ச்சியால் கல்லாகிவிடுகின்றான்.
தம்பியோ அவன் சென்ற வழியிலிருந்த நாட்டின் இளவரசிகளை டிராகனிடமிருந்து காப்பாற்றுகிறான். அதனால் அரசர் தம் மகளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து, அந்நாட்டின் பாதிப் பகுதிக்கு அரசனாகவும் ஆக்குகிறார்.
தம்பி திரும்பிவந்து பாறையான தன் அண்ணனையும், மற்றவர்களையும் எப்படி மீட்டான்? அந்த அதிசய வெள்ளை மான் என்ன ஆனது? என்பதைத் தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.