அதிதி குட்டி! 👼பாட்டி👵🏻 உனக்கு ஒரு குட்டிக்கதை சொல்லப் போறேன்:-.
ஒரு ஊருல ஒரு குட்டிக் குருவி🐤 இருந்துச்சு. அந்தக் குருவிக்கு ரொம்ப நாளாப் பள்ளிக்கூடம்🏫 போய்ப் படிக்கணும்னு ஆசை. அதனால அது அவங்க 🐦அம்மாகிட்ட கேட்டுச்சு.


நான் பள்ளிக்கூடம் போகணும்; எனக்கு ஸ்கூல் புக்📚 பேக் 🎒எல்லாம் வேணும்னு கேட்டுச்சு. உடனே அவங்க அம்மா🐦 எப்படி வாங்கறதுன்னு யோசிச்சு யோசிச்சுப் பாத்தாங்க..


அப்ப அந்த வழியா டீனு👧🏻 வந்தாள். அவள் மூன்றாவது வகுப்பில் படிக்கிறாள். குட்டிக் குருவியோட அம்மா🐦 டீனுவிடம்👧🏻 “என்னோட குட்டிக் குருவிக்கு பள்ளிக்கூடம்🏫 போக, எங்கே புத்தகம்📚 வாங்குவது? எங்கே ஸ்கூல் பேக்🎒 வாங்குவது?” என்று கேட்டது.


இதைக்கேட்ட அவளுக்கு ரொம்ப சிரிப்பாக😂😂 இருந்தது. “ஏன் சிரிக்கிறாய் டீனு?👧🏻 என்று அம்மா🐦 குருவி கேட்டது.

Teenu
படம்: அப்புசிவா


உடனே டீனு👧🏻 “உங்க குட்டிக் குருவி🐤 எல்லாம், எங்க ஸ்கூல்ல உட்காரவே முடியாது;. அங்க பெரிய நாற்காலி🪑 போட்டு இருப்பாங்க; அதுல உங்க குட்டிக்🐤 குருவி உட்கார முடியாது; புத்தகம்📚 பள்ளிக்கூடப் பை🎒எதையும் உங்க குட்டிக்🐤 குருவியால தூக்கவே முடியாது” என்று கூறினாள்.


உடனே அம்மா குருவி🐦 ரொம்ப வருத்தப் பட்டது.😞 டீனுக்கும் வருத்தமாக இருந்தது, .உடனே அவள் வீட்டுக்கு வந்து, அவள் 🤶🏻அம்மாவிடம் சொல்லி குட்டிக்🐤 குருவிக்காகக் குட்டிப் பையையும் 🎒குட்டிப் புத்தகங்களையும்📚 தயார் செய்து கொண்டு சென்று, அம்மா 🐦குருவியிடம் கொடுத்தாள்.


அம்மா குருவிக்கு🐦 ஒரே சந்தோஷம்😀😀😀. குட்டிக் குருவி🐤 டீனு 👧🏻தோளில் உட்கார்ந்து கொண்டு தினமும் பள்ளிக்குச்🏫 சென்றது. டீனுவின் தோழிகள்👭👭🏻👭🏾 அனைவருக்கும் குட்டிக் குருவி நண்பர்👭🏻 ஆகிவிட்டது. இப்படியே மூன்றாவது வகுப்பை குட்டிக் குருவி படித்து முடித்தது.


கதை நல்லா இருக்கா? இதன் தொடர்ச்சியை அடுத்த மாதம் பார்க்கலாம். .ஓகேவா?

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments