“வணக்கம் பூஞ்சிட்டுக்களே! எல்லாரும் எப்படி இருக்கீங்க? இந்த மாசம் நானும், பிண்டுவும் சேர்ந்து அட்டகாசமான ஒரு எக்ஸ்பிரிமெண்ட் செய்யப் போறோம். சீக்கிரம் வா பிண்டு!” என பிண்டுவின் கைகளைப் பிடித்து இழுத்து வந்தாள் அனு.

பிண்டு, “என்ன அனு? எப்போதும் நான்‌ தானே எக்ஸ்பிரிமெண்ட் பத்தி பேசுவேன், இன்னிக்கு நீ பேசுற?”

“அதுவா இன்னிக்கு அம்மா மார்க்கெட்லேர்ந்து ரெட் கலர் முட்டைகோஸ் வாங்கிட்டு வந்திருக்காங்க, அதை வெச்சு நானே சூப்பரா ஒரு எக்ஸ்பிரிமெண்ட் செய்யப் போறேன். பிண்டு, போய் நான் சொல்ற பொருட்களை எல்லாம் எடுத்து வா!” என வழக்கத்திற்கு மாறாக பிண்டுவை பொருட்களை எடுத்து வர அனுப்பினாள் அனு.

தேவையான பொருட்கள்:

1. பொடியாக நறுக்கிய சிவப்பு நிற முட்டைகோஸ்- ¼ கிலோ

2. தண்ணீர்

3. சோப்பு

4. வினீகர்

5. எலுமிச்சை சாறு

6. ஷாம்பு

7. சிறிய கண்ணாடிக் குடுவைகள் நான்கு

செய்முறை:

  1. முதலில் நறுக்கிய முட்டைக்கோஸை ஒரு பாத்திரத்தில் இட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
  1. பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கொதி வந்த பிறகு அந்த கலவையை வடிகட்டி முட்டைக்கோஸ் சாற்றினை மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  1. பிறகு முட்டைக்கோஸின் சாற்றினை நான்கு குடுவைகளிலும் சம அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். இச்சாற்றின் காரகாடித்தன்மை சுட்டெண்(pH) நியூட்ரலாக இருக்கும். அதாவது அமிலத்தன்மையுமில்லாமல், காரத்தன்மையும் இல்லாமல் இருக்கும்.
  1. அடுத்து முதல் குடுவையில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை கலந்து அதன் நிறம் எவ்வாறு மாறுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
  1. பிறகு அடுத்த குடுவையில் இரண்டு ஸ்பூன் ஷாம்பு கலந்து அதன் நிறம் எப்படி மாறுகிறது என்று கவனித்துக் கொள்ளுங்கள்.
  1. மூன்றாவது குடுவையில் எலுமிச்சைச் சாறு மற்றும் ஷாம்பு இரண்டையும் ஒவ்வொரு ஸ்பூன் வீதம் கலந்து அது எப்படி மாறுகிறது என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.
  1. நான்காவது குடுவையில் உள்ள சாற்றில் எதையும் கலக்காமல் அப்படியே வைத்திருங்கள்.
  1. இப்போது நான்கு குடுவையில் உள்ள தண்ணீரின் நிறத்தின் வித்தியாசத்தைப் பாருங்கள்.
  1. எலுமிச்சைச் சாற்றில் உள்ள அமிலத்தன்மை முட்டைக்கோஸ் சாற்றின் நிறத்தை நல்ல சிவப்பாகவும், ஷாம்புவில் உள்ள காரத்தன்மை பச்சை நிறமாகவும் மாற்றி இருக்கும்.
cabbage experiment

அறிவியல் உண்மைகள்:

சிவப்பு நிற முட்டைக்கோஸ் சாற்றில் ஆந்தோசயனின் என்கிற ரசாயனம் இருக்கும் அதன் பி.ஹெச் நடு நிலைமையில் இருக்கும். அதனோடு அமிலத்தன்மை சேர்கையில் சிவப்பு நிறமாகவும், காரத்தன்மை சேர்கையில் பச்சை நிறமாகவும் மாறும்.

முட்டைக்கோஸ் சாற்றில் பல்வேறு ரசாயனங்களை ஊற்றி அதன் காரம் மற்றும் அமிலத்தன்மையை சோதித்துப் பாருங்கள் நண்பர்களே!

“என்ன குட்டீஸ்! ரொம்ப ஈசியான மற்றும் சூப்பரான எக்ஸ்பிரிமெண்ட்டை பார்த்தீங்களா! நீங்களும் பெரியவங்க உதவியோடு இதைச் செய்து பாருங்க. அடுத்த மாதம் வேறொரு செய்முறையோட வரோம் பாய்!” என அனுவோடு சேர்ந்து பிண்டுவும் விடை பெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments