சின்ன விஷயம் – 3

என்ன சுட்டீஸ்? எல்லாரும் எப்டி இருக்கீங்க? 

நம்ம விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் இவங்களோட நோட் புக்ஸ் எல்லாம் காணாமப் போச்சுன்னு டீச்சர் கிட்ட சொன்னாங்கல்ல.. அது என்னாச்சுன்னு பாக்கலாமா? 

தலைமை ஆசிரியை ஜெயலக்ஷ்மி, வகுப்பாசிரியை வசந்தி மற்றும் பிடி மாஸ்டர் மூவரும் சேர்ந்து தங்களுக்குத் தெரிந்த காவல்துறை நண்பரை அழைத்து இதற்கு என்ன செய்வது என்று ஆலோசனை செய்தனர். 

அவர்கள் பள்ளியில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்றும் தனியாக செக்யூரிட்டி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்ல இதெல்லாம் நிர்வாகத்தின் அனுமதியின்றி செய்ய முடியாது என்று உணர்ந்து, வேறு வழியின்றி அவர்கள் இந்த விஷயத்தைப் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தார்கள். 

அவர்கள் சிசிடிவி கேமிரா பொருத்துவது பெரிய வேலை. அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு உடனடித் தீர்வு செக்யூரிட்டி ஏற்பாடு செய்வதுதான் சிறந்தது என்று முடிவு செய்து பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு செக்யூரிட்டி இருப்பது போல ஏற்பாடு செய்தனர். 

இதனால் மாணவ மாணவிகளின் பொருட்கள் காணாமல் போகமால் இருந்ததோ இல்லையோ அவர்களின் கவனம் சிதறலாயின. 

சிறிய பிள்ளைகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை. ஆனால் கொஞ்சம் பெரிய வகுப்பு மாணவர்களுக்கு அவர்களால் பெரிய பாதிப்புகள் வந்தன. 

பாடம் எடுக்கும் ஆசிரிய ஆசிரியைகளும் அசௌகரியமாக உணர்ந்தார்கள். 

இரண்டு வாரங்கள் பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டவர்கள், இது சரிப்படாது என்று நிர்வாகத்திடம் முறையிட்டார்கள். 

திருட்டும் பெரிதாகக் குறையவில்லை. இவர்களாலும் தொல்லைகளே என்று தெரிவித்தார்கள். 

நிர்வாகமும் வேறு வழியின்றி காவல்துறையின் உதவியை நாடியது. 

காவல்துறையிலிருந்து இரண்டு நாட்களில் திருடனைப் பிடிக்க வேண்டும் என்று குறிக்கோள் வைத்துக் கொண்டு சில பெண் காவலர்களை மாறு வேடத்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதன்படி அதிகாலையிலேயே பள்ளியை சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர் போலவும் பள்ளியின் கேன்டீனில் வேலை செய்பவர் போலவும் பள்ளி ஆயா போலவும் பெண் காவலர்கள் வந்து வேலை செய்யத் தொடங்கினர். 

படம்: அப்புசிவா

இரண்டு நாட்கள் எந்தத் திருட்டும் நடக்கவில்லை. அதனால் மேலும் சில நாட்கள் பள்ளியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று அவர்களுக்கு காலக்கெடு அதிகரிக்கப்பட்டது. 

அப்போதுதான் அது நடந்தது. 

அது என்ன? 

அடுத்த இதழில் பார்க்கலாம்.

அது வரைக்கும் அம்மா அப்பா சொல் பேச்ச கேட்டு வீட்டுக்குள்ளயே சமத்து பசங்களா இருங்க சுட்டீஸ். 

வரட்டுமா?

பை! பை! டாட்டா! 

👋👋👋👋👋👋👋👋

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *