குட்டி இளவரசன்

ஆசிரியர் – அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (Antoine de Saint-Exupery)

பிரெஞ்சிலிருந்து தமிழில் – வெ.ஸ்ரீராம் &  ச.மதனகல்யாணி

வெளியீடு:- க்ரியா பதிப்பகம் சென்னை.

விலை ₹ 125/-

அந்த்வான் து செந்த்-எக்சுபெரி எழுதிய The Little Prince என்ற பிரெஞ்ச் நாவலின் தமிழ் வடிவம் தான், குட்டி இளவரசன்.  1943 ல், வெளியான இந்நாவல் உலக முழுக்க, குழந்தைகள் கண்டிப்பாக வாசித்தே ஆக வேண்டும் என்ற பட்டியலில், இடம் பிடிக்கும் நூல்களுள் ஒன்று.

கதை சொல்லியான ஆசிரியர் ஓட்டிய விமானம் பழுதடைந்ததால் சகாரா பாலைவனத்தில் இறங்க வேண்டியதாகி விடுகின்றது. மனித நடமாட்டமே இல்லாத அந்த இடத்தில் தான் வேறு ஒரு குட்டி கிரகத்திலிருந்து வந்த குட்டி இளவரசனைச் சந்திக்கிறார் கதைசொல்லி. 

ஒவ்வொரு நாளும், அவனது சொந்த கிரகத்தைப் பற்றியும், அவன் பயணம் செய்த பல்வேறு கிரகங்கள் பற்றியும் கேட்டு அறிந்து கொள்கிறார்  ஆசிரியர்.  யாரோ ஒருவனுக்குத் தான் அரசனாக இருப்பதில் பெருமையடையும் அரசன்,  தற்பெருமைக்காரன், குடிகாரன், புவியியலாளன், பிஸினஸ்மேன் ஆகியோரைக் குட்டி இளவரசன் தன் பயணத்தில் சந்திக்கிறான். அதற்குப் பிறகு அவனுக்குத் தோன்றும் உண்மை, “பெரியவர்கள் உண்மையிலேயே, விசித்திரமானவர்கள் தாம்”  

 “ஒரு பவோபாப் மரத்தை அழிப்பதில், காலம் தாழ்த்தினால், பிறகு என்றென்றும் அழிக்க முடியாது.  அது கிரகம் முழுவதும், பரவிவிடும்.  வேர்கள் கிரகத்தை ஊடுருவித் துளைத்துவிடும்”. என்ற காரணம் சொல்லி ரோஜா கன்று போலவே, முளைக்கும் பவோபாப் மரக்கன்றுகளை உடனுடக்குடன் பிடுங்கி எரிய வேண்டும் என்கிறான் இளவரசன். பவோபாப் மரம் என்பது,, ஹிட்லரின் நாசிசத்தைக் குறிக்கிறது, என்பது திறனாய்வாளரின் கருத்து.  குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், இரு வேறு வாசிப்பனுபவத்தைத் தரும் சிறந்த நாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *