பலாப்பழம் 30 சுளை எடுத்து அதில் கொட்டையை நீக்கி விட வேண்டும்.

சுளையை மட்டும் நல்ல தண்ணீர் ஊற்றி பழம் நன்றாக சாஃப்ட்டாக வரும் வரை வேக வைக்க வேண்டும்.

சற்று மிருதுவாக வந்ததும் அதை ஆஃப் செய்து நீரை வடிகட்டி பழத்தை மட்டும் மிக்சி ஜாரில் எடுத்து வைக்கவும்.

இதற்கிடையே ஒரு மீடியம் சைஸ் டம்பளரில் வெல்லம் எடுத்து அதை நன்றாக பொடித்து கொள்ளவும். அதில் கால் டம்ளர் தண்ணீர் விட்டு வெல்லம் கரையும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

சூடு ஆறிய பலாப்பழத்தை  நன்றாக மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

அடி கனமான கடாயில்  ஐந்து ஸ்பூன்  நெய் விட்டு சூடானதும் அதில் அரைத்து வைத்துள்ள பலாப்பழ கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும் இரண்டு  அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து அதில் வெல்ல கரைசலை ஊற்றி நன்கு கிளறிவிடவும்.

பத்து நிமிடங்கள் கைவிடாமல் கிளறவும், இடை இடையே சிறிது நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

வெல்லம் பலாப்பழம் இரண்டும் நன்றாக கலந்ததும் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கார்ன் ப்ளவர் மாவை கெட்டியாக கரைத்து அதில் சேர்க்கவும். 

இறக்குவதற்கு முன் ஏலக்காய் பொடி சேர்த்து, வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments