தூக்கணாங்குருவி

ஆங்கிலத்தில் weaver bird என்று அழைக்கப்படுகிற தூக்கணாங்குருவி, இந்திய துணக்கண்டத்திலும் , தெற்காசிய நாடுகளிலும் பரவலாக காணப்படுகின்றன.   Baya weaver  மற்றும் streaked weaver என இரு வகைகள் இருந்தாலும் முன்னதை பரவலாக பார்க்கலாம்.

பொதுவாக கூட்டமாக வாழும் . கிராம புறங்களில் வயல் வெளிகளை ஒட்டிய இடங்களிலும் , சிறிய புதர் செடிகளை சுற்றியும் காணலாம். முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலங்களில் இவை பிரத்தியேகமாக கூடு கட்டும். புற்கள் , ஓலைகள் போன்றவற்றில் இருந்து உரித்த நார்களைக்கொண்டு கட்டப்படும் கூடுகள் மேற்பகுதியில் தடிமனாக சுரைக்காய் போன்றும் கீழ் பகுதி குழாய் போன்றும் இருக்கும். இவற்றின் இந்த கூடு கட்டும் திறமை உண்மையில் அதிசயம்தான்.

படம்: Dr. பா. வேலாயுதம்

 Baya weaver பனை மர ஓலைகளிலும் , நீர் நிலைகளின் மேல் படர்நிதிருக்கும் மரக் கிளைகளிலும் கூடு கட்டும். Streaked weaver நாணல் புதர்களில் கட்டும். இதனால் எதிரிகள் எளிதில் அணுக முடியாது. ஆண் பறவை கூடு கட்ட தொடங்கி பாதி அளவில் பெண் பறவையை பார்வையிட அழைக்கும். இதில் ஆண் பறவைகளிக்கிடையே போட்டி இருக்கும்.

பெண் பறவைக்கு பிடித்து போகும் பட்சத்தில் மீதி கூட்டை ஆண் பெண் இரண்டும் சேர்ந்து கட்டி முடிக்கும். மழைக்காலத்தில் கூடு கட்டும். சில சமயங்களில் மின்மினி பூச்சிகளை கூட்டின் மேல் ஒட்டி அழகு படுத்தும். இரண்டு முதல் நான்கு முட்டைகள் இடும். பருவ காலம் முடிந்ததும் கூடுகளை விட்டு செல்லும். காலி கூடுகளை மற்ற சிறிய பறவைகள் பயன் படுத்தும்.

படம்: Dr. பா. வேலாயுதம்

சிட்டுக்குருவி அளவில் இருக்கும் இப்பறவைகளில் ஆண் பறவையின் தலை மற்றும் மார்பு அடர் மஞ்சள் நிறத்திலும், முகம் கருப்பு நிறத்திலும், உடல் பழுப்பு நிறத்தில் கோடுகளுடன் இருக்கும். பெண் பறவையின் உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் கோடுகளுடன் இருக்கும். ஆண் பறவையின் அலகு கருமை நிறத்திலும், பெண் பறவையின் அலகு வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். Streaked weaver மார்பில் கோடுகள் காணப்படும். சராசரி எடை 20 கிராம் இருக்கும். கூட்டமாக காணப்படும் இவை நெல், கம்பு போன்ற விதைகளை உண்ணும். விளைந்த நிலங்களில் கதிர்களின் மேலும் அறுவடை செய்த நிலங்களில் உதிர்ந்த தானியங்களை தரையில் அமர்ந்தும் உண்ணும். அழைப்பு “ சிட் …சிட் …” என்று தொடர்ச்சியாக இருக்கும்.

குழந்தைகளே! அடுத்த முறை வயல் வெளிகளில் செல்லும் போது தூக்கணாங்குருவி கூடுகள் இருக்கிறதா என்று பார்ப்பீர்கள்தானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *