பச்சை வைரம்

ஆசிரியர்: கொ.மா.கோ.இளங்கோ

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை (8778073949)

விலை:  ₹ 120/-

பட்டுக்கூடு காப்பகத்தின் பொறுப்பாளர் மோராம்மா. எபோலா வைரஸ் காரணமாகப் பெற்றோரை இழந்த பிளிகி என்ற சிறுமி இக்காப்பகத்தில் வளர்கிறாள்.  

மேற்கு ஆப்பிரிக்கா நாடான சியரா லியோன் நாட்டின் பின்னணியில் இக்கதை நடக்கிறது. பழங்கால ஆப்பிரிக்க மக்களின் துயரமிகுந்த கொத்தடிமை வாழ்வு பற்றியும், வெள்ளையரின் அடக்குமுறை பற்றியும் மோராம்மாவின் மூலம் பிளிகி தெரிந்து கொள்கிறாள்.  

அடிமைகளாக்கப்பட்ட ஆப்பிரிக்க மக்கள் மேற்கு ஆப்பிரிக்கா வழியாகவே கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப் படுகிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர், அமெரிக்காவில் விடுதலை பெற்று நாடு திரும்பி, ஓர் இலவ மரத்தினடியில் விடுவிக்கப்படுகின்றனர். அம்மரம் தான் சியாரோ லியோன் மக்களால், ‘பச்சை வைரம்’ எனக் கொண்டாடப்படுகின்றது. வெள்ளைக்காரர்களின் நிறவெறியாலும், ஆதிக்க மனப்பான்மையாலும் ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் அனுபவித்த கொடுமைகள், அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக நடத்தப்பட்ட அடிமை வியாபாரம், அடிமைகளின் நீண்ட கால போராட்டங்களின் விளைவாகப் பெற்ற சுதந்திரம் ஆகியவை குறித்த வரலாற்றை, இளையோர் அறிந்து கொள்ள அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *