“ஹாய் பூஞ்சிட்டுக்களே!” – பிண்டு

“ஹலோ ப்ரெண்ட்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க?” – அனு.

பிண்டு, “அனு இந்த முறை ஈசியா செம்ம ஜாலியா ஒரு எக்ஸ்பிரிமெண்ட் செய்வோமா?”

“ம்ம் செய்யலாமே பிண்டு, குட்டிப் பசங்களும் ஈசியா செய்யுற மாதிரி சொல்லு பிண்டு” – அனு

“ஓகே! இன்னிக்கு நம்ம ராட்சசக் கைரேகை செய்யப் போறோம்!”

ராட்சசக் கைரேகையா? அச்சோ அப்ப ராட்சசனுக்கு நாம எங்க போறது பிண்டு?

“ராட்சசன்லாம் வேண்டாம் முதல்ல நான் சொல்ற பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வா அனு” என்று அனுவை தேவையான பொருட்களை எடுத்து வர அனுப்பி வைத்தது பிண்டு.

தேவையான பொருட்கள்:

1. பலூன்

2. இங்க் பேட்

“என்ன பிண்டு ரெண்டே ரெண்டு பொருட்கள் தானா, இதோ எடுத்துட்டு வந்துட்டேன்!” என்று எடுத்து வந்தாள் அனு.

செய்முறை:

1. பலூனை ஊதுவதற்கு முன் நான்கைந்து முறை இழுத்து விட்டுக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் பலூனை மிக ஈசியாக ஊதிவிடலாம்

2. அடுத்து கட்டை விரலை இங்க் பேடில் தோய்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3. பிறகு பலூனை டேபிளின் மீது வைத்து சுருக்கம் இல்லாத பகுதியில், கட்டை விரல் கைரேகையை நன்கு அழுத்த வேண்டும்.

fingerprint

4. மெதுவாக அதே சமயம் அழுத்தமாக விரல் ரேகை முழுவதும் பலூனில் படும் படி செய்ய வேண்டும்.

5. பிறகு பலூனை ஊதி அதன் வாய்ப் பகுதியை நூலால் நன்கு கட்டிக் கொள்ளவும்.

6. இப்போது உங்களின் கைரேகை பெரிதாக ராட்சசனின் கைரேகை போல் தெரியும்.

fingerprint1

7. இது போல் ஆட்காட்டி விரல், மோதிரவிரல் மற்றும் கால் விரல் ரேகைளை வைத்து சோதனை செய்து பாருங்கள்.

அனு, “செம்ம சூப்பர் பிண்டு! நீயும் உன் கைரேகையை வையேன்”.

“நான் மிஷின் அனு! எனக்குக் கைரேகையெல்லாம் இருக்காது நீ இது போல் செய்து உன் நண்பர்களுடன் விளையாடு” – பிண்டு.

“ஓகே பிண்டு, வழக்கம் போல நீயே அறிவியல் உண்மைகளைச் சொல்லிடு!” என்று கூறி சிரித்தாள் அனு.

அறிவியல் உண்மைகள்:

கைரேகை ஒவ்வொரு நபரின் தனி அடையாளம் ஆகும். ஒரு நபருக்கு இருக்கும் ரேகை போல் இன்னொரு நபருக்கு இருப்பதில்லை. இரட்டையர்களின் கைரேகை கூட வெவ்வேறாகத் தான் இருக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். கைரேகை என்பது பல குற்றங்களில் முக்கியமான தடயம் ஆகும்.

பலூன் எலாஸ்டிக் தன்மை வாய்ந்தது எனவே அதில் ரேகையின் அச்சு வைத்து ஊதும் பொழுது, பலூன் பெருசாகிறது கூடவே உங்களின் கைரேகையும் பெருசாகிறது. இச்சோதனையைச் செய்து உங்கள் கைரேகை மற்றும் உங்கள் நண்பர்களின் கைரேகையின் தனித்துவத்தை ரசியுங்கள் நண்பர்களே.

இந்த மாதக் கேள்வி : எந்த விலங்கிற்கு மனிதனைப் போன்ற கைரேகை இருக்கும். விடை கண்டுபிடியுங்கள்! அடுத்த மாதம் சந்திக்கலாம்.

பாய் ஃப்ரெண்ட்ஸ்!  பாய் பூஞ்சிட்டுக்களே! என்று அனுவும், பிண்டுவும் விடை பெற்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments