வணக்கம் குட்டீஸ்
இது உங்கள் அபிமான ஊர்சுத்தலாம் வாங்க பகுதி 12
அப்படி இப்படின்னு நம்ம பகுதில இது வரைக்கும் அமெரிக்காவுல இருக்கிற 11 ஊர்கள சுத்தி சுத்தி வந்துருக்கோம். போன மாசம் ஹவாய் தீவுல ஆட்டம் போட்டோம். அங்கேயிருந்து கிளம்பி வரவே மனசில்ல.
என்ன பண்ணலாம்ன்னு ஹவாய் கடல்ல ஹாயா யோசிச்சுக்கிட்டு இருந்தேன்..
அப்ப நான் கண் அசந்த நேரம் பார்த்து என் தொப்பிய உஷார் பண்ணி எங்கேயோ மறைச்சு வச்சிருச்சு ஒரு குட்டி கேடி குரங்கு..
அந்த குட்டிய கண்டுபிடிச்சு.. அப்புறம் அதுகிட்டேயிருந்து என் தொப்பி கண்டுபிடிச்சு.. ஷப்பா.. நினைச்சாலே கண்ணு கட்டுது..
ஆனாலும் மனம் தளரக்கூடாது.. செல்லும் வழியில் எவ்வளவு தடைகள் இருந்தாலும்..
இருந்தாலும்
இருந்தாலும்..
ஷ்ஷ்ஷ்
குட்டீஸ்
தொப்பிய திருடின குரங்கு அதோ தூரத்துல நின்னு ஆட்டம் போடுது.. இன்னிக்கு ஒரு வழி பண்ணிட வேண்டியதுதான்.. பட் பூஞ்சிட்டுகளே ஒரு விஷயத்த நம்ம இங்கே கவனிக்கனும். நானா போய் கேட்டா குரங்கு ஆட்டம் போடும். எப்படியாவது அத மடக்கி கையும் களவுமா பிடிக்கனும்..
என்ன பண்ணலாம்?
ம்ம்ம்ம்… ஆஹா ஒரு சூப்பர் ஐடியா! மிஷன் இம்பாஸபிள் மாதிரி ஜேம்ஸ் பான்ட் நாட் நாட் செவன் மாதிரி
ஒற்றனா போய் அந்த கேடி குரங்க பிடிச்சாகனும்!
யெஸ் மிஷன் இம்பாஸபிள் டார்கெட் ரெடி..
ஒன்
டூ
..
அட்டா ஒரு முக்கியமான விஷயம்.. வழக்கமா இந்த ஒற்றர்கள் படத்துல எல்லாம் விதவிதமான புத்திக்கூர்மையுள்ள நவீன சாதனங்கள் கையடக்கமான பொருட்கள வைச்சிருப்பாங்களே! அதுக்கு என்ன செய்யுறது!
ம்ம்ம்ம்ம்?
ஐடியா..
கை வசம் ஒரு இடம் இருக்கு!
அந்த இடத்தில உலகத்தில இருக்க அத்தனை புகழ்பெற்க ஒற்றர்கள பத்தியும் அவங்களோட ரகசியமான நாட்டுப் பணியில அவங்க பயன்படுத்தின பொருட்கள பத்தியும் எதிரிகள் கிட்ட இருந்து அவங்க தப்பிச்சத பத்தியும் தெரிஞ்சுக்கலாம்..
அப்படி என்ன இடம்ன்னு கேக்கறீங்களா..
எதுக்கு சஸ்பென்ஸ்
நேரா போய் பாத்திடுவோமோ
ரெடி ஜூட்
ஒன்னு
ரெண்டு
மூணு..
வ்ரூம் ஷ்ரூம் வ்ரூரூரூரூம்்
குழந்தைகளே நாம போக வேண்டிய இடம் வந்தாச்சு..
என்ன குட்டீஸ்
அப்படி பாக்கறீங்க..
ஒற்றர்கள் பத்தி தெரிஞ்சகறதா சொல்லிட்டு இது என்ன இடம்ன்னு தானே கேக்கறீங்க..
வரேன் விஷயத்துக்கு வரேன்..
முதல்ல இந்த ஊரப்பத்தி பாக்கலாமா..
பூஞ்சிட்டுகளே இப்ப நாம வந்திருக்கிற ஊர் அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்க்டன் டிசி.
அமெரிக்காவோட முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்க்டன் அவர்களின் பேரில் கட்டமைக்கப்பட்ட ஊர் தான் வாஷிங்டன் டிசி. டிசி என்பதை டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா அப்படின்னு விரிவுப்படுத்துறாங்க.
உலகத்துக்கே பஞ்சாயத்து செய்யுற அமெரிக்காவோட மொத்த பஞ்சாயத்தும் நடக்கிறது இங்கே தான்.
வாஷிங்டனில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், சுற்றுலா இடங்கள், பூங்காக்கள், வின்வெளி காட்சியகங்கள், உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியங்கள்ன்னு சொல்லிட்டே போற அளவுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு.. இதெல்லாம் சொல்லவே மூச்சு வாங்குது..
ஒவ்வொன்னா பாத்தா செம ஜாலியா இருக்கும்..
இங்கே இருக்கிற லிங்கன் நினைவிடம், அமெரிக்காவோட சட்டசபையான கேபிடால் பில்டிங், ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம்.. அதெல்லாம் விட நம்ம கொடைக்கானல் மலர் கண்காட்சி மாதிரி வசந்த காலத்துல இங்கே நடக்கிற மிகவும் பிரபலமான பூக்கள் விழா எல்லாமே பார்க்க பார்க்க கண்கொள்ளா காட்சிகள்..
அடடே மறந்தே போச்சு..
உங்கள இங்க கூட்டிட்டு வந்ததே முக்கியமான இடத்த காண்பிக்கத்தான்..
இதோ போலாமா
குட்டீஸ் இது தான் இன்டெர்நேஷனல் ஸ்பை மியூசியம்.
அதாவது பன்னாட்டு ஒற்றர்கள் அருங்காட்சியகம்.
உலக நாடுகள்ள பல தேச பணிகளுக்காக தங்கள் உயிரையே பணயம் வைச்சு எதிரிகளோட கோட்டைக்குள்ள சாமர்த்தியமா புகுந்து தங்களோட அறிவுத்திறமையால அவங்க கண்கள்ல விரல விட்ட உலகப்புகழ்ப்பெற்ற ஒற்றர்களோட வாழ்க்கைக்குறிப்புகள இங்கே ஒரு சேர ஒண்ணா பாத்து ரசிக்கலாம்.
சரி வாங்க ஸ்பை மியூசத்துக்குள்ள போகலாம்..
குட்டீஸ் அங்கே பாத்தீங்களா..
பார்க்க சாதாரணமா்இருக்க இந்த காருக்குள்ள ஏகப்பட்ட விஷயம் இருக்காம்.
பாத்தாங்களா.. காருக்குள்ள எத்தனை ரகசிய அறைகள்ன்னு. இக்கட்டான காலக்கட்டத்துல தப்பிக்கவும், நவீன சாதனங்களோட கட்டுப்பாடோட பல கார்கள நம்ம ஒற்றர்கள் அதற்காகவே பிரத்யேகமாக வடிவமைச்சு வேலை செஞ்சிருக்காங்க..
என்ன இது புறா இங்கென்ன பண்ணுதுன்னு பாக்கறீங்களா.. வேற ஒண்ணுமில்ல புறா வீடு தூது தான். ஆனா கெட்டிக்கார புறா. கண்ணுல கேமரா, கால்கள்ல எலக்ட்ரிக் சாதனம் பொருத்தப்பட்ட விஞ்ஞான விவேக புறா. ஆச்சரியமா இருக்குல்ல..
அதே ஆச்சரியத்தோட நம்ம ஒற்றர்கள் என்னென்ன பொருட்களை கைக்கு அடக்கமா வெச்சிருந்தாங்கன்னு பாப்போமா?!
கையுறைக்குள்ள துப்பாக்கி, குடைக்குள்ள கத்தின்னு அன்றாடம் நாம பயன்படுத்துகிற பல பொருட்களில் யாருக்கும் சந்தேகம் வராமா பல கையடக்கமான கருவிகள பாதுகாப்புக்காகவும் பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில பாதுகாப்பாகவும் பயன்படுத்தியிருக்காங்க..
இதோ இதப்பாருங்களேன்..
இது நவீன ஸடெத்தாஸ்கோப் கருவி . இத பயன்படுத்தி முதலாம் உலகப்போர் சமயத்துல எதிரிகளால பூட்டி பாதுகாக்கப்பட்ட பல விஷயங்கள பெட்டியில இருந்து சேகரிச்சுருக்காங்க..
என்ன குழந்தைகளே!
பார்க்க பார்க்க ஆச்சரியமா இருக்குள்ள..
எனக்கும் தான். இதுல ஒரு கருவிய பிடிச்சு அந்த கேடி குரங்க ஒரு வழி பண்ணிட்டு வரேன்..
அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைப்பெறுவது
சிட்டு.. பூஞ்சிட்டு நாட் நாட் நாட் செவன்!
டன்டன்டடைங்!