– க.கீதா

2021 பூஞ்சிட்டு சிறார் கதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை. வாழ்த்துகள்.

இரவு நேரம் மிகவும் கருமை சூழ்ந்து இருந்த தருணம் வண்ணத்து பூச்சி ஒன்று குளிரில் மிகவும் நடுங்கி கொண்டு இருந்தது காற்று வீசும் வேகத்திற்கு அது உட்கார்ந்து இருந்த செடியின் கிளையில் அதிக நேரம் தாக்குப்பிடிக்க இயலாமல் முடிந்தவரை முயற்சி செய்துகொண்டு கிளையை பிடித்துக்கொண்டே  நாம் இன்று இங்கு இருந்தால் நம் உறக்கம் கெட்டுவிடும் எங்கேயாவது ஒரு அமைதியான காற்று அதிகம் இல்லாத இடத்திற்கு சென்றால் என்ன என நினைத்து கொண்டே அங்கிருந்து கிளம்பியது

காற்று வீசும் திசையின் எதிர் திசையில் காற்றை கிழித்துக்கொண்டு போராடி ஒரு வழியாக ஒரு வீட்டின் பால்கனியில் சென்று அமர்ந்தது… அந்த வண்ணத்துப்பூச்சி அமர்ந்ததும் சிறிது நேரத்தில் காற்றின் வேகம் முழுவதுமாக குறைந்தது ஒரு அமைதியான அழகிய இரவு நேரம் அதற்கு மிகவும் பிடித்திருந்தது இனி நாம் இங்கு நிம்மதியாக உறங்கலாம் என்று தனது இறக்கைகளை சிலிர்த்து விட்டு மூச்சை இழுத்து விட்டு மிகுந்த சந்தோசத்துடன் தன்  கண்களை மூடி ஒரு தூக்கத்தை போட ஆரம்பித்தது

இரு நொடிகள் கூட ஆகவில்லை எங்கிருந்தோ  ஒரு சப்தம் அதன் காதினுள் கேட்டு அதனை தூங்க விடாமல் தொல்லை செய்தது என்னவாக இருக்கும் என்று கண்விழித்து சுற்றிலும் பார்த்தது கண் எட்டிய தூரம் வரை யாரும் இல்லை சரி அருகில் சென்று பார்க்கலாம் என எழுந்து  அந்த வீட்டினை சுற்றி சுற்றி தேடி பார்த்தது அப்பொழுது அங்கு  ஒரு ஜன்னல் உட்புறம் ஒரு சிறுமி உட்காந்து கண்ணீர் வழிந்த கண்ணங்களுடன் தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருப்பதனை கண்டது 

அதனை கண்ட  அந்த வண்ணத்துப்பூச்சி சிறுமியின் அருகில் சென்று பார்க்கலாம் என சிறுமியின் அருகில் சென்று அவள் முகத்தின் முன்  பறந்துகொண்டு இருந்தது சிறுமி வண்ணத்துப்பூச்சியை சிறிதும் கண்டுகொள்ளாமல்  கண்ணீரினை துடைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தேம்பி அழுதுகொண்டு இருந்தாள் எவ்வளவோ அவளின் பார்வையை திசை திருப்ப நினைத்த வண்ணத்துப்பூச்சி முயன்று தோல்வியடைந்தது

இறுதியாக இவ்வாறு சுற்றி கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என முடிவு செய்து ஒரு திட்டம் தீட்டியது அந்த திட்டத்தின் படி செய்து முடித்தாக வேண்டுமென முடிவு செய்து தனது இறக்கைகளை தயார் படுத்திகொண்டு கூர்ந்த பார்வையுடன் சிறுமியை நோக்கி பாய்ந்தது சிறுமியின் கண்ணத்தில் இருந்த கண்ணீர் துளிகளை தன் கால்களால் தட்டி சென்றது

 அழுகையை மீறி என்னவென பயந்து கன்னத்தை தட்டி விட்டு கொண்டிருந்த சிறுமியை பார்த்து பயப்படாதே பயப்படாதே நான் தான் நான்தான் என்றது வண்ணத்துப்பூச்சி வண்ணத்துபூச்சியை கண்ட சிறுமி வியந்து போய் பார்த்தாள் பின்பு முகத்தை திருப்பிக்கொண்டு மறுபடியும் தன் அழுகையை தொடர ஆரம்பித்தாள்

 வண்ணத்துப்பூச்சி அந்த சிறுமியை பார்த்து என்ன செய்துகொண்டு இருக்கிறாய் என்று கேட்டது சிறுமி ஏதும் கூறாமல் வண்ணத்துப்பூச்சியை  பார்த்து விட்டு முகத்தினை திருப்பிக்கொண்டாள்  வண்ணத்துப்பூச்சி விடாமல் மறுபடியும் உனைத்தானே கேட்கிறேன் என்ன செய்துகொண்டு இருக்கிறாய் என்றது அதற்கு அந்த சிறுமி பார்த்தால் தெரியவில்லையா அழுதுகொண்டு இருக்கிறேன் என்றாள்

அதற்கு அந்த வண்ணத்துப்பூச்சி அட அது தெரிகிறது எதற்காக அழுகிறாய் என்றது சொல்ல மாட்டேன் போ என்று கூறிக்கொண்டே  தேம்பி தேம்பி அழுதுகொண்டு இருந்தாள். சொல்லமாட்டாயா சரி இருக்கட்டும் சொல்ல வேண்டாம் அழுகாமல் இரு நான் உறங்க வேண்டும் என்றது வண்ணத்துப்பூச்சி,

 நீ உறங்க நான் ஏன் அழாமல் இருக்க வேண்டும் நான் அழுவேன் அழாமல் இருக்க மாட்டேன் போ… என்று சிறுமி கூறினாள் அதற்கு வண்ணத்துப்பூச்சி நான் தூங்க வேண்டும் நீ உன் அழுகையை நிறுத்த போகிறாயா இல்லையா என்று முறைத்துக்கொண்டு சிறுமியை நோக்கி கேட்டது அதற்கு அந்த சிறுமி  நான் அழுதுகொண்டு இருக்கிறேன் நீ தூங்கப்போகிறாயா என கத்திவிட்டு போ போ இங்கிருந்து போ  என கூறிக்கொண்டே இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.

butterfly
படம் : அப்புசிவா

வண்ணத்துப்பூச்சி தன் காதினை மூடிக்கொண்டு சரி சரி நான் ஏதும் கேட்கவில்லை நீ அழுவதை நிப்பாட்டு என்றது சிறுமி கேட்கவில்லை எதனையும் வண்ணத்துப்பூச்சி என்ன செய்து அழுகையை நிறுத்துவது என பலமாக யோசிக்க ஆரம்பித்தது வேறு வழியில் சென்றால்தான் சரியாக வருமென தன்னுள் கூறிக்கொண்டே சிறுமியின் அருகில் சென்று நாம் விளையாடுவோம் வருகிறாயா என்றது, 

 நான் அழுதுகொண்டு இருக்கிறேன் நீ விளையாட கூப்பிடுகிறாய் போ நீ போ… நான் எங்கும் வர மாட்டேன் அழ தான் செய்வேன்  என்று அழுகையை தொடர்ந்தாள். எவ்வளவு கேட்டும் சிறுமி வண்ணத்துப்பூச்சியுடன் விளையாடுவதற்கு வரவில்லை…

கேட்டு கேட்டு களைத்து போன வண்ணத்துப்பூச்சி உடனே சிறுமியின் முகத்தின் அருகில் சென்று விளையாடலாம் வா வா என சிறுமியின் முகத்தினை தொட்டு தொட்டு சென்றது பின்பு கிச்சு கிச்சு மூட்டியது வண்ணத்துப்பூச்சியின் சேட்டைகள் கண்டு சிறுமியின் கண்ணீர் கரைந்து முகத்தில் சிரிப்பு வர ஆரம்பித்தது சிறுமி போதும் போதும் போ  என்று கூறும் அளவிற்கு கிச்சு மூட்டியது… ஒரு வழியாக சிறுமியின் முகத்தில் சிறிது சிரிப்பினை கண்டதும் வண்ணத்துப்பூச்சி  அமைதியானது…

பின்பு மறுபடியும் காரணம் அறிந்துகொள்ள  வண்ணத்துப்பூச்சி சிறுமியிடம்  எதற்காக அழுதாய் என்று கேட்டது. வண்ணத்துப்பூச்சி அவ்வாறு கேட்டதும் சிறுமியின் முகம் வாடிப்போனது உடனே வண்ணத்துப்பூச்சி சரி சரி நான் ஏதும் கேட்கவில்லை நீ அழாதே நாம் விளையாடுவோம் சரியா என்றது, சிறுமி சோகமான முகத்துடன் வண்ணத்துப்பூச்சியை பார்த்து சரி என்றவாறே தலையாட்டினாள்.

வண்ணத்துப்பூச்சி என்ன விளையாடலாம் என யோசித்துக்கொண்டே  சரி  நான் ஒளிந்துகொள்கிறேன் நீ என்னை கண்டுபிடி என்றது சிறுமியும் சரி என்றாள்  வண்ணத்துப் பூச்சி கட்டிலின் கீழ் ஒளிந்துகொண்டது சிறுமி அதனை எளிதாக கண்டுபிடித்துவிட்டால் பின்பு சிறுமி ஒளிந்துகொண்டாள் 

இருவரும் சிறிது நேரம் அவ்வாறே  விளையாடினர் ஆனால் சிறுமியின் வாடிய முகம் மட்டும் மாறவில்லை. இதனை கண்ட  வண்ணத்துப்பூச்சி என்ன செய்தால் சிறுமியை சிரிக்க வைக்க இயலும் என யோசித்துக்கொண்டு இருந்தது விளையாட்டில் கவனம் இல்லாமல் வேறு ஏதோ சிந்தனையில் இருந்த வண்ணத்துபூச்சியை கண்ட சிறுமி விளையாடாமல் என்ன யோசிக்கிற என்று வண்ணத்துப்பூச்சியை பார்த்து கேட்டாள்

சிறுமி கேட்டதும் நாம் இருவர் மட்டுமே விளையாடுகிறோம் இன்னும் ஒருவர் இருந்திருந்தால் விளையாட்டு இன்னும் சுவாரஷ்யமான  நன்றாக இருக்கும் என யோசிக்கிறேன் என்று கூறி விட்டு மீண்டும் யோசனையில் மூழ்கியது  வண்ணத்துப்பூச்சி, இவ்வாறு அது  கூறியதை கேட்டதும் சிறுமி  ஜன்னல் அருகில் வந்து நின்று மேலே வானத்தை  பார்த்து யோசிக்க துவங்கினாள்

அப்பொழுது அவளது கண்களில் அழகிய நட்சத்திரங்கள் அதிகமாக தெரிந்தன உடனே  நட்சத்திரத்தை கூப்பிடலாமா என்றாள் சிறுமி. அதற்கு வண்ணத்துப்பூச்சி நட்சத்திரமா அது எப்படி வரும் அது அங்கு இருக்கிறது  வெகு தொலைவில் நாம் கூப்பிடுவது எப்படி கேட்கும் அதற்கு,  அது நம்முடன் வந்து எப்படி  விளையாடும்  நீ வேண்டுமென்றால் கூப்பிடு வருகிறதாவென பார்க்கலாம் ஆனால் நான் கூப்பிட மாட்டேன் என்று கூறிவிட்டு கைகளை கட்டிக்கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டு நின்றது வண்ணத்துப்பூச்சி,

 சிறுமியும் சரி நான் கூப்பிடுகிறேன் என்று வானத்தை பார்த்து நட்சத்திரமே… நட்சத்திரமே…நான் கூப்பிடுறது  கேட்குதா உன்னதான்  கூப்பிடுறேன் எங்க கூட விளையாட வரியா என்று கேட்டாள் இரண்டு மூன்று முறை அழைத்ததும் வானில் இருந்து ஒரு ஒளி அவர்கள் மீது பட்டது ஒளி தன் மீது பட்டத்தை கண்ட வண்ணத்துப்பூச்சி திரும்பி பார்த்தது

வானில் இருந்து அந்த ஒளி அவர்களை நோக்கி வந்துகொண்டு இருந்தது  இருவரும் அதனை  பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது நட்சத்திரம் அவர்கள் முன் வந்து நின்றது நான் வந்துவிட்டேன் என்று கூறி சிரித்தது… நட்சத்திரம்  வந்ததை கண்ட இருவரும் ஏதும் பேசாமல்  திகைத்து போய் நின்றனர்

எதற்காக நீங்கள் இருவரும்  இவ்வாறு நிற்கறீர்கள் என்றது நட்சத்திரம் அதற்கு சிறுமியும் வண்ணத்துப்பூச்சியும் ஆச்சர்யத்துடன் நீ எப்படி கீழே வந்தாய் என கேட்டார்கள்… அதற்கு அந்த  நட்சத்திரம் நான் எப்பொழுதும் மேலே இருந்துகொண்டு உன்னைப்போல் சிறுவர்கள் எல்லாரும் விளையாடுவதை பார்த்துக்கொண்டே இருப்பேன்

 எனக்கும் அவர்களுடன் விளையாட ஆசையாக இருக்கும் ஆனால்  இதுவரை யாரும் என்னை விளையாட கூப்பிட்டது இல்லை ஆதலால்  நீங்கள் இன்று கூப்பிட்டதும் உடனே  ஓடி வந்து விட்டேன் நாம் விளையாட்டினை ஆரம்பிக்கலாமா என்று சிரித்துக்கொண்டே மிகுந்த ஆர்வத்துடன் நட்சத்திரம் கேட்டது.

சிறுமியும் வண்ணத்துப்பூச்சியும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்து கொண்டிருக்க இருவர் முகத்திலும் மெல்லமெல்ல புன்னகை பூத்தது பின்பு மூவரும்  நண்பர்கள் ஆகினர் மூவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர் ஓடி பிடித்து விளையாடுதல் ஓளிந்து விளையாடுதல்  என விளையாட்டுகளை அடுக்கிக்கொண்டே சென்றனர்…

விளையாடிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை மூவரும் அவ்வளவு  சந்தோசமாக விளையாடிக்கொண்டு இருந்தனர் அவ்வாறு  இருக்கையில் அவர்கள் விளையாடிக்கொண்டு இருந்த இடத்தில் வெட்பமும் வெளிச்சமும் அதிகம் ஆனது போல் வண்ணத்துப்பூச்சி உணர்ந்தது

உடனே வண்ணத்துப்பூச்சி சிறுமியிடம் உனக்கு தெரிகிறதா  இவ்வளவு வெளிச்சம் வெட்கை எங்கிருந்து வருகிறது  என கேட்டது உடனே சிறுமி எனக்கும் அப்படித்தான் இருக்கிறது என்னனு தெரியவில்லையே  என்று கூறிக்கொண்டே இருவரும் நட்சத்திரத்தை பார்த்தார்கள் அப்பொழுது அந்த வெளிச்சமும் வெட்கையும்  நட்சத்திரத்திடம் இருந்து வருவதை கண்ட வண்ணத்துப்பூச்சியும் சிறுமியும் அதனிடம் அருகில் சென்று கேட்டார்கள் 

 நட்சத்திரமே நீ இங்கு வரும்பொழுது இவ்வளவு வெட்பம் இவ்வளவு வெளிச்சம் இல்லை இப்பொழுது எப்படி இவ்வாறு மாறினாய் என்று கேட்டாள் சிறுமி அதற்கு வண்ணத்துப்பூச்சி ஆமாம் ஆமாம் நான் கூட குளிர் காற்றில் நிம்மதியாக உறங்கலாம் என்று வந்தால் இப்பொழுது இவ்வளவு வெட்கையாக வெளிச்சமாக  இருக்கிறதே இப்படி இருந்தால் எப்படி  இன்று நான் உறங்கினபடிதான் என்று கூறிய வண்ணம் தலையில் கை வைத்து உட்கார்ந்தது

அதனை கேட்ட நட்சத்திரம் நான் இவ்வாறு ஆனதற்கு நீ தான் காரணம் என்று சிறுமியை பார்த்து கூறியது  நட்சத்திரம் கூற  கேட்ட சிறுமி நான் எவ்வாறு காரணம் ஆக முடியும் நான் என்ன செய்தேன் நான் தான்  ஒன்றும் செய்யவில்லையே  பின் எப்படி நான் காரணம் ஆகமுடியும் என்று குழப்பத்துடன் தலையை சொரிந்துகொண்டே  நட்சத்திரத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்

 மீண்டும் நட்சத்திரம் நீ மட்டுமே நான் இவ்வாறு இருப்பதற்கு காரணம் என்றது வண்ணத்துப்பூச்சி  உடனே சரி சிறுமியே  காரணமாக இருக்கட்டும் இப்பொழுது  நீ சொல் அந்த காரணத்தின் விளக்கம் என்னவென்று என்றது சிறுமியும் ஆமாம் என்னனு சொல்லு என்றாள்  நட்சத்திரமும் சரி என்று கூற ஆரம்பித்தது

 விளக்கம் கூற ஆரம்பித்ததும் சிறுமியை பார்த்து நான் வரும்பொழுது உன் முகம் எவ்வாறு இருந்தது என கேட்டது அதற்கு அந்த சிறுமி ஏதும் கூறாமல் அமைதியாக யோசித்து பார்த்துக்கொண்டிருக்க வண்ணத்துப்பூச்சி பதில் கூறியது அவள் முகம் சோகத்தில் வாடி இருந்ததென,

அதற்கு நட்சத்திரம் ஆமாம் சரி இப்பொழுது எப்படி இருக்கிறது என்றது அதற்கும் வண்ணத்துபூச்சியே  பதில் கூறியது வாடிய முகம் மலர்ந்து புன்னகை பூத்திருக்கிறது என்று வண்ணத்துப்பூச்சி கூறி முடிப்பதற்குள் சிறுமி நாங்கள் என்ன கேட்டால் நீ என்ன சொல்ற நான் என்ன காரணம் என்று சொல்லு என்றாள்

உடனே நட்சத்திரம் சிறுமியிடம் வண்ணத்துப்பூச்சி கூறிய பதில் தான் நீ கேட்கிற கேள்விக்கும் பதில் என்று சிரித்தது ஆமாம் உந்தன் முகம் வாடி இருந்தால் நான் ஒளி இழந்து போவேன் அதுவே உந்தன் முகம் மலர்ந்திருந்தால் நான் மிகவும் பிரகாசமாக இருப்பேன் என்றது பின் உந்தன் கண்களில் நீர் வழிந்தால் அதனில் நான் மூழ்கி கரைந்து இல்லாமல் போய் விடுவேன் என்றது

நட்சத்திரம் கூறிய பதில் கேட்டு சிறுமியும் வண்ணத்துப்பூச்சியும் சிரித்தவாறே ஓடி வந்து நட்சத்திரத்தை  கட்டிக்கொண்டார்கள் நட்சத்திரமும் சந்தோஷத்தில் இன்னும் அழகாக பிரகாசித்தது அப்படியே பேசிக்கொண்டிருக்க நட்சத்திரம் தனக்கு நேரம் ஆகிறது நான் செல்ல வேண்டுமென கூறியது

 சிறுமியும் வண்ணத்துப்பூச்சியும் நீ போகாதே எங்களுடனே இரு என்றார்கள் நட்சத்திரம் ஏதும் கூறாமல் சிரித்துக்கொண்டே அவர்கள் இருவரையும் அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்து தட்டிக்கொடுத்து தூங்க வைத்தது இருவரும் அயர்ந்து தூங்கினதும் நட்சத்திரம் வானிற்கு சென்றது…

சிறிது நேரம் கழித்து சிறுமிக்கு முழிப்பு வர அருகில்  வண்ணத்து பூச்சி அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தது அதனை பார்த்த சிறுமி  நட்சத்திரத்தை தேடினாள் அறைக்குள் எங்கு தேடியும் இல்லை அங்கு நட்சத்திரம்  இல்லாததை கண்டு ஓடி சென்று  ஜன்னல் வழியாக வானில் பார்த்தாள் அங்கு அந்த நட்சத்திரம் அழகாக மின்னிக்கொண்டு இருந்தது

அதனை கண்ட அந்த சிறுமி நான் தான் உன்னை போக வேணான்னு சொன்னேன்ல எதுக்கு போன என்று கூறி கொண்டே அதனை பார்த்தவாறே அழுக ஆரம்பித்தால் அவள் அழுக அழுக அந்த நட்சத்திரம் ஒளி இழந்துகொண்டு போவதை கண்டாள் அவள் அது ஒளி இழப்பதை கண்டதும் நட்சத்திரம்  கூறியது அவளுக்கு நினைவு வந்தது

உடனே தன் அழுகையை நிறுத்த கண்களை துடைக்க செல்லும் முன் அவளது கண்களில் இருந்த கண்ணீர் அவளது கன்னத்தில் விழுந்து விடும் அவ்வாறு கண்ணீர் விழுந்த நொடி நட்சத்திரம் வானத்தில் காணாமல் போய்விட்டது  நட்சத்திரத்தை காணாமல் சிறுமி அதிர்ந்து போய் தூக்கத்தில் இருந்து விழித்தாள் (அவ்வளவு நேரமாக அயர்ந்த உறக்கத்தில் கனவு உலகத்தில் இருந்துருகிறாள்)

கண் விழித்ததும் கட்டிலில் இருந்து இறங்கி ஓடி சென்று ஜன்னல் வழியாக நட்சத்திரம் இருக்கிறதா என்று பார்த்தாள் அங்கு நட்சத்திரம் அழகாக மின்னிக்கொண்டு இருந்தது நட்சத்திரம் வானில் இருப்பதனை கண்டு மிகவும் சந்தோஷப்பட்டாள்

பின்பு அந்த நட்சத்திரத்தை பார்த்து நட்சத்திரமே நட்சத்திரமே நீ என்னை விட்டு இனி எங்கும் போகாத நான் எப்போவும் அழமாட்டேன் சரியா நீ என்கூடவே இரு நான் சிரிச்சுகிட்டே இருக்கேன் நீயும் என்கூட சிரிச்சுகிட்டே இரு சரியா எங்கயும் போக கூடாது என கூறினாள்

பின்பு தனது பிஞ்சு கைகளில் முத்தங்களை நிரப்பி அவை அனைத்தையும்  வானம் நோக்கி நட்சத்திரங்களுக்கு அனுப்பிவிட்டு நான் தூங்க போறேன் நீயும் தூங்கு சரியா என்று கூறி விட்டு வந்து கட்டிலில் படுத்து உறங்கினாள்..

அவள் கண் அயர்ந்த சிறிது நொடியில் ஜன்னல் வழியாக வந்த வண்ணத்துப்பூச்சி அவள் அருகில் இருந்த போர்வை எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டு அவளது கன்னங்களில் அன்பு முத்தங்களை பதித்து விட்டு பறந்து சென்றது…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments