ஒரு நாள் பூரி எண்ணைச் சட்டில நீச்சல் அடிக்கிறத ஒரு இட்லி பாத்துச்சாம். அதுக்கும் பூரி போல குளிக்கனும்னு ஆச வந்துச்சாம்.
அது அம்மாட்ட என்ன எண்ணைச்சட்டில போடுனு சொல்லுச்சாம்.. அம்மா, வேணாம் வேணாம் நீ கருகிடுவ எரியும்னு சொன்னாங்களாம்
இட்லி கேக்கவே இல்லயாம்.. சரினு அம்மா இட்லிய எண்ணை சட்டில போட்டாங்களாம்…
இட்லி முதல்ல எண்ணைல மூழ்குச்சாம்.. அப்றம் சுருசுருனு எரிஞ்சிச்சாம்.. அப்டியே எண்ணெய்ல மிதந்து மேல வந்து மிதந்திச்சாம்.. ஆனா இட்லியோட மென்மை, வெண்மைலாம் போயி அது கடக்முடக்னு பொறுபொறுன்னு ஆகிடுச்சாம். ஆனா இட்லியோட மென்மை, வெண்மைலாம் போயி அது கடக்முடக்னு பொறுபொறுன்னு ஆகிடுச்சாம்.
இட்லிக்கு ரொம்ப வருத்தமாகி அழ ஆரம்பிச்சுடுச்சாம். அப்ப பூரி சொல்லுச்சாம் அழாத இனிமே நீ சாதா இட்லி இல்ல பொறிச்ச இட்லி.. உன்ன எல்லாருக்கும் புடிக்கும்” னு.
இட்லிக்கு இந்த வசனம் ரொம்ப பிடிச்சிடுச்சாம்.. “நா சாதா இட்லி இல்ல பொறிச்ச இட்லி” னு விதவிதமா சொல்லி பாத்துட்டு இருந்ததாம். அப்ப அத யாரோ தூக்கினாங்களாம்… யாரு யாரு?
நம்ம குட்டி வாண்டு தான்…
கடக்முடக் நறுக்
பொறியியல் பட்டதாரி, தற்சமயம் இல்லத்தரசி; இரு சிறார்களின் தாய்; இரண்டு அச்சு புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னைச் சுற்றி நிகழும் சமூக நிகழ்வுகள் கதைகளாக உருப்பெருகின்றன. தொடர்ந்து வாசித்து எழுதி, என்னை நானே மேம்படுத்த முயன்று கொண்டிருக்கும் புதிய எழுத்தாளர் நான்.