வணக்கம் குட்டி சுட்டி குழந்தைகளே!!!
எல்லோரும் சேர்ந்து சத்தமா கை தட்டுங்க பார்ப்போம்.. ஏனென்றால் நம்ம பூஞ்சிட்டுக்கு முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று. வாங்க.. ஆடலாம்.. பாடலாம்.. இந்த நாளைக் கொண்டாடலாம்.
பூஞ்சிட்டோடு இந்த ஒரு வருடம் கை கோர்த்து பயணித்த குட்டி வாசகர்களுக்கும் அவர்களுக்கு தமிழையும், தமிழின் மூலமாக இந்த உலகையும் அறிமுகப்படுத்த விரும்பும் அம்மா, அப்பா, தாத்தா பாட்டிகளுக்கு பூஞ்சிட்டின் அன்பும் நன்றிகளும்..
பூஞ்சிட்டின் ஆரம்பத்தின் போது தங்கள் அறிவுரை மற்றும் வாழ்த்துகளோடு எங்களுடன் இருந்த ரவிசங்கர் சார் மற்றும் கபிலன்சாருக்கு எங்கள் நன்றிகள்.
பூஞ்சிட்டு எழுத்தாளர்கள் குழு…இவர்கள் இல்லாமல் பூஞ்சிட்டு இல்லை. குழந்தைகளுக்கான இலக்கியம் தமிழில் பெருக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இணைந்த நல்உள்ளங்களுக்கு எங்கள் அன்பு மற்றும் பூஞ்சிட்டோடான அவர்களது வெற்றி பயணம் தொடர எங்கள் வாழ்த்துகள்..
பூஞ்சிட்டு எட்டுத்திசைக்கும் பறக்க வேண்டும்.. அதன் இனிய மொழி தமிழ் பேசும் குழந்தைகள் உள்ள வீடுகள் அனைத்திலும் ஒலிக்க வேண்டும். இதுதான் எங்கள் ஆசை; எங்கள் கனவு; எங்கள் இலட்சியம்.. தொடர்ந்து சிறகடித்துப் பறப்போம்.
இந்த மாதம் பூஞ்சிட்டின் பகுதிகள் அனைத்தையும் படித்து மகிழுங்கள். அடுத்த மாதம் பூஞ்சிட்டின்பிறந்த நாளை முன்னிட்டு நாம் நடத்தும்சிறார் கதைப்போட்டிக்கான முடிவுகளோடு சந்திப்போம்..
உங்கள் வீட்டு சுட்டிகள் தமிழோடு வளர்ந்து விளையாட, ஒவ்வொரு மாதமும்,உங்களைத்தேடி – பூஞ்சிட்டு