வணக்கம் பூஞ்சிட்டுக்களே,

“Life after work” அப்படின்னு பெரியவங்க எல்லோருமே ஒரு விஷயம் யோசிப்பாங்க,

அதாவது தன்னுடைய நேரம் முழுவதும் அலுவலக வேலையிலேயே செலவாகிறது, வேலையை தவிர வாழ்க்கையில் வேறு ஒன்னும் பண்ண முடியலையேன்னு ஒரு விரக்தி வரலாம். அப்படி வரும்போது ஒரு புத்துணர்ச்சிக்காக பின்வரும் செயல்கள் போன்று ஏதோ ஒன்றை அவர்கள் செய்ய நினைப்பார்கள்.

1. புத்தகம் வாசிப்பது , புத்தகம் எழுதுவது, ஓவியம் வரைவது, கவிதை எழுதுவது 

2. முதியோர் இல்லத்துக்கு சென்று தொண்டு செய்வது

3. தன்னுடைய அனுபவத்தை குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வது

4. புதிதாக ஒரு சமையலை செய்ய நினைப்பது

5. புதிதாக ஒரு இடத்திற்கு சென்று இயற்கையை ரசிப்பது

6. நண்பர்களிடம் பேசி மகிழ்வது

7. நல்ல நினைவுகளை ஆசை போடுவது

இது போன்று ஏதோ ஒன்றினை செய்து புத்துணர்ச்சி பெறலாம்.

இந்த மாதிரி குழந்தைகளாகிய நீங்களும் சலித்து போகும் சூழ்நிலை வந்திருக்கிறதா? இல்லையென்றால் சபாஷ் குழந்தைகளே, உங்கள் நண்பர்களோ குடும்பத்தில் உள்ளவர்களோ  யாராவது சலிப்போடு இருந்தால் அவர்களை உற்சாகப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசிப்போமா செல்லங்களே!

முதலில் ஏன் சலிப்பு வருகிறது என்று புரிந்து கொள்ளலாம். தான் செய்யும் செயலின் முக்கியத்துவம் புரியலனா சலிப்பு வரலாம். எடுத்துக் காட்டாக, நாம ஏன் படிக்கிறோம், ஏன் ஆன்லைன் வகுப்பு என்று புரியலனா சலிப்பாக இருக்கலாம். அதுவே இந்த வகுப்பு மூலமாக நான் புதிதாக ஒன்றை கற்று கொள்கிறேன், இந்த அறிவு பின்னாளில் நான் ஒரு தொழிலபதிராக உதவலாம் என்று நினைக்க ஆரம்பித்தால் ஆர்வமாக அதை தெரிந்துகொள்ள தூண்டலாம். அந்த ஆர்வமும், ஏன் படிக்கிறோம் என்ற தெளிவும் சலிப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

brain

மூன்று வேளையும் சமைத்துக் கொடுக்கும் நம் அம்மாவுக்கும் சலிப்பு ஏற்படலாம், ஆனால் அப்பொழுதெல்லம் தன்னுடைய சமையல் இந்தக் குடும்பத்தின் ஆரோக்கியம் என்று நினைப்பதால்தான் சலிக்காமல் நம் பசியை போக்க நம் அம்மாவால் முடிகிறது. அதில் நீங்களும் உங்களால் ஆன உதவியை செய்தால் உங்களுக்கு சமையல் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும், அம்மாவை மகிழ்வித்த மன நிறைவும் கிடைக்கும் குழந்தைகளே! உங்களுக்கு சூடு பட்டு விடக் கூடாது அல்லது கத்தி படக் கூடாது என்று அம்மா உங்களை சமையலறையில் அனுமதிக்கவில்லையென்றால், உங்கள் குடும்ப சூழ்நிலைக்கும் உங்கள் வயதுக்கும் ஏற்றவாறு என்ன செய்து உங்களையும் உங்கள் குடுத்திலுள்ளவர்களையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளலாம் என்று யோசிங்க செல்லங்களே, அனைவரையும் உற்சாகப்படுத்தி அசத்துங்க செல்லங்களே:)

நம்முடைய மூளையை  உற்சாகப்படுத்தும் இன்னும் ஒரு குறிப்பும் என் நினைவிற்கு வருகிறது.

அது என்னவென்றால், நாம் ஒரு விஷயத்தை செய்து முடித்து விட்டோம் என்று தெரியும் பொழுது நம் மூளை உற்சாகமடைகிறது.

அதனால் நாம் நம்முடைய முயற்சியில் ஒவ்வொரு படியையும் தாண்டி விட்டோம் என பின்வரும் அட்டவணையில் உள்ளது போல் பச்சை வண்ணம் அடித்துக் கொள்ளலாம்.

இந்த மாதத்திற்குள் பின்வரும் பழக்கங்களை நான் தினமும் செய்ய வேண்டும் என ஒரு பட்டியல் போட்டு கொள்ளுங்கள்.

 ஞாயிறுதிங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனி
இயற்கையுடன் சிறிது நேரம்(நிலா பார்த்தல், செடிக்கு தண்ணீர் விடுதல்)       
உடற்பயிற்சி       
சுயமாக குளித்தல்       
சுயமாக உணவு உண்ணுதல்       
சுயமாக வீட்டு பாடம் செய்தல்       
பொழுதாக்கம்(ஓவியம் , வாசித்தல், எழுதுதல்..)       
தேர்வுக்கு தயாராதல்        

இது போன்று தொடர்ந்து செய்வதால் நம் மூளையும் உற்சாகம் பெறும், நமக்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவும் கிடைக்கும் குழந்தைகளே! இந்தத் தெளிவும் திட்டமிடுதலும் நம்மை சலிப்படைவதிலிருந்து காப்பாற்றும்:) இது போன்று நீங்களும் உற்சாகமடைந்து  உங்கள் சுற்றத்தையும் உற்சாகப் படுத்துங்கள் பூஞ்சிட்டுக்களே!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *