அமெரிக்க சிறார் எழுத்தாளர் பி.டி.ஈஸ்ட்மேன் எழுதிய ARE YOU MY MOTHER? என்ற கதையைத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் திரு.கொ.மா.கோ.இளங்கோ.

வெளியீடு:- பாரதி புத்தகாலயம், சென்னை (8778073949) விலை ₹ 30/-

ஒரு குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், கூட்டிலிருந்து விழுந்து  விடுகிறது.  அது வெளிவரும் சமயம், இரை தேடப்போயிருந்த அம்மாவைத் தேடி அலைகிறது.  இடையில் சந்திக்கும் பூனை, கோழி, நாய், பசு ஆகியவற்றிடம், “நீங்க என் அம்மாவா?” எனக் கேட்கிறது.  அது மீண்டும் அதன் அம்மாவைச் சந்தித்ததா என்பதை அறிந்து கொள்ள, கதையை வாசிக்கவும்..

ஆங்கிலத்திலும், தமிழிலும் கதை கொடுக்கப்பட்டுள்ளதால், எந்த மொழி குழந்தைக்குப் பரிச்சயமோ அதில் வாசிக்கலாம்.  இது கறுப்பு வெள்ளை படங்களுடன் கூடிய ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான நூல்.

guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments