ஹாய் சுட்டீஸ்!
எல்லாரும் எப்டி இருக்கீங்க? ஸ்கூல் போகறதுக்கு ரெடியாகிட்டீங்களா?
உங்க டீச்சர்ஸ், ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் பார்க்கப் போற குஷில இருக்கீங்கதானே?! எனக்கு தெரியும்! எல்லாம் இதே மாதி எப்பவும் குஷியா ஜாலியா இருங்க.
இவ்ளோ நாளா ஆன்லைன் க்ளாஸ் அட்டன்ட் பண்ணி போர் அடிச்சிருக்கும்.. இனிமே ரெகுலர் க்ளாஸ்தான்.. எல்லாரும் ஜாலியா ஸ்கூலுக்கு போய்ட்டு வாங்க. நல்லா படிங்க! சமத்தா இருங்க!
சரி! நம்ம கதைய பாக்கலாமா?
சின்ன விஷயம் என்ற இந்த கதையோட கடைசி பகுதிக்கு நாம வந்துட்டோம்.
இதோட கடைசி பகுதிய பாக்கறதுக்கு முன்னால இந்த திருட்டை செய்யறது யார்? இந்த திருட்டை அந்த குட்டி பசங்க எப்டி தடுத்தாங்க?
இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை தெரிஞ்சா இந்த கதை முடிஞ்சிடும்!
இந்த மாதம் உங்களுக்கு இதுதான் போட்டி!
- எல்லாருடைய சாப்பாட்டையும் திருடியது யார்?
- இந்த திருட்டை அந்த குட்டி பசங்க எப்படி தடுத்து நிறுத்தினாங்க?
போன 5 எபிசோட்களையும் படிச்சி இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடையை கீழ இருக்கற கமென்ட் பாக்ஸ்ல கமென்ட் செய்ங்க.
80% சரியா எழுதியிருக்கற சுட்டிக்கு தகுந்த பரிசு வழங்கப்படும்!
கதையோட கடைசி பகுதிய அடுத்த மாதம் குழந்தைகள் தினத்தில தெரிஞ்சிக்கலாம்.
அதுவரைக்கும் சமத்தா இருக்க சுட்டீஸ்!
டாட்டா! பை! பை!
👋👋👋👋👋👋👋