அந்த கடிதத்தில் “நாங்கள் எங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம். நீங்கள் அந்த மேளத்தை உங்களுக்கு எப்போது உதவி வேண்டுமோ அப்போது அடித்தால் நாங்கள் அப்போது வருவோம்” என்று எழுதியிருந்தது.
அபியும், சுபியும் அது உண்மையா என்று சோதித்துப் பார்க்க அந்த மேளத்தை அடித்தார்கள். உடனே அங்கே அந்த விலங்குகள் வந்தார்கள்.
“ஹாய்! அபி, சுபி” என்று கூட்டமாக சொன்னார்கள்.
“நீங்க நாங்க எப்போது மேளத்தை அடித்தாலும் வருவீர்களா?” என்று அபி கேட்டாள்.
“வருவோம்” என்று யானை சொன்னது.
“அப்போ சரி, நாங்க இது வேலை செய்யுதான்னு சோதிச்சுப் பார்க்கத் தான் இந்த மேளத்தை வாசித்தோம், அப்புறம் பார்க்கலாம்” என்று சுபி கூறினாள்.
அந்த விலங்குகளும் திடீரென மறைந்து விட்டன.
அபி, சுபி அந்த விலங்குகள் அவர்களின் சட்டையில் தான் ஒளிந்திருக்கும் என்று நினைத்து அவர்களின் கப்போர்டைத் திறந்து பார்த்தனர். ஆனால் அந்த விலங்குகள் எங்கே என்று தெரியவில்லை. அதனால் அடுத்த முறை அந்த விலங்குகளிடமே கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள்.
ஒருநாள் அபியும், சுபியும் அருகிலிருந்த பூங்காவிற்குத் தனியே சென்று நேரம் போவதே தெரியாமல் விளையாடினர். இருட்டத் தொடங்கியதும் அவர்களுக்கு வீட்டிற்கு வரும் வழி தெரியவில்லை. உடனே அபி அவள் கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்த மேளத்தை அடித்தாள். உடனே அங்கு அந்த விலங்குகள் வந்தன.
“என்ன பிரச்சனை அபி, சுபி?” என்று கங்காரு கேட்டது.
“நாங்க வீட்டுக்குப் போகும் வழியை மறந்துவிட்டோம்” என்று அபி அழுது கொண்டே சொன்னாள்.
“கவலைப்படாதீங்க! நாங்க உங்களை வீட்டில் சேர்த்துடறோம்” என்று இரண்டு முயல்களும் சொன்னது.
“எங்களுக்கு வழி தெரியும்” என்றே புலி சொன்னது.
அவர்கள் இருவரையும் அந்த விலங்குகள் வீட்டில் சேர்த்துவிட்டு மறைந்துவிட்டன. அபியும், சுபியும் அந்த மேளத்தை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்தார்கள். அவர்கள் அப்புறமாக அதை அவர்களின் அம்மா, அப்பாவிடம் காண்பித்தார்கள். அவர்களுக்கு இருவரும் மேளத்தை வாசித்துக் காண்பித்தனர்.
ஆனால் அந்த விலங்குகள் அங்கே வரவில்லை. உடனே அபியும், சுபியும் அழத் தொடங்கினார்கள்.
அப்போது அவர்கள் வீட்டிற்கு ஒரு கொரியர் வந்தது. அதை அவர்களின் மாமா வெளிநாட்டில் இருந்து அனுப்பியிருந்தார்கள். அதற்குள் இரண்டு சட்டைகள் இருந்தன.
அந்த சட்டையில் ஐந்து விலங்குகள் இருந்தன. யானை, கங்காரு, புலி மற்றும் இரண்டு குட்டி முயல்கள் இருந்தன……..
—– இனிதே முடிவடைந்தது! விரைவில் பாகம் இரண்டில் சந்திக்கலாம்—-