டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் சித்த மருத்துவம் பயின்று மருத்துவராகப் பணியாற்றியவர். பெரியாரின் மீதும், பெரியாரின் கருத்துக்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டதால், ஒரு கட்டத்தில் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக்கொண்டவர்.
பெண் கல்வி, கலப்பு மணம், விதவைகளின் மறுமணம் ஆகிய விஷயங்களை கண்போல் போற்றினார், தர்மாம்பாள்.
விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் திருமண அரசின் உதவித் திட்டத்திற்கு ‘டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்’ என்றே பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, கணவனை இழந்த பெண்ணிற்கு நடக்கும் மறுமணத்துக்கு உதவி தொகை அளிக்கப்படுகிறது.
இவர் பெரும் முயற்சி செய்து, 1938 நவம்பர் மாதம் 13 ஆம் நாள், சென்னையில், தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார்.
இவரது முயற்சியாலேயே தமிழ் ஆசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படலாயிற்று.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று பல முறை சிறைவாசம் செய்த இவர் தமிழ் வளர்க்கும் ‘மாணவர் மன்றம்’ அமைப்பினை உருவாக்கி, அதன் தலைவராகவும் பத்தாண்டுகள் பணியாற்றினார்.
இவர் ஆற்றிய தொண்டுகளை மெச்சி, இவருக்கு ‘வீரத் தமிழன்னை’ என்ற பட்டம் வழங்கப்பட்டது!
என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.