“வணக்கம் குழந்தைகளே! எல்லாரும் தீபாவளிப் பண்டிகையை எப்படி கொண்டாடுனீங்க? நல்லா பட்டாசு வெடிச்சீங்களே?” என்று குதூகலத்துடன் கேட்டது பிண்டு.

“ஓ நான் நிறைய பட்டாசு மத்தாப்பு எல்லாம் வெடிச்சேன் பிண்டு. செம்ம ஜாலியா இருந்துச்சு! ஆனா இப்ப மத்தாப்பு தான் தீர்ந்து போச்சு” என அழுவது போல் சொன்னாள் அனு.

“நீ கவலையேப்படாத அனு, இன்னிக்கு ஒரு சூப்பரான தண்ணீர் மாத்தாப்பு செய்யலாம்”.

“தண்ணியில மத்தாப்பா? தண்ணி பட்டா மத்தாப்பு எரியாதுன்னு அம்மா சொன்னாங்களே பிண்டு”

“நீ முதல்ல நான் சொல்ற பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வா அப்புறம் பாரு” என தேவையான பொருட்களை‌ கூறியது பிண்டு.

தேவையான பொருட்கள்

தண்ணீர்

எண்ணெய்

ஃபுட்கலர்ஸ் – உங்களின் விருப்பமான நிறம்

கண்ணாடி டம்ப்ளர் இரண்டு

முள்கரண்டி ஒன்று.

“எல்லாமே வீட்டுல இருக்குற பொருட்கள் தானே பிண்டு அதுனால ஈசியா எடுத்துட்டு வந்துட்டேன்” என பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்தாள் அனு.

செய்முறை

1. ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பங்கு சாதாரண நிலையில் உள்ள தண்ணீரல நிரப்பிக் கொள்ளவும்.

2. மற்றொரு கண்ணாடி டம்ளரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

3. எண்ணெய் சேர்த்த குடுவையில் இரண்டு சொட்டு ஃபுட் கலரினை சேர்க்கவும்.

4. பிறகு இந்த கலவையை முள்கரண்டி வைத்து நன்கு அடித்துக் கலக்கவும். ஃபுட் கலர் சிறு சிறு துளிகளாய் மாறும் வரை கலக்கவும்.

5.இப்போது எண்ணெய் கலவையை தண்ணீர் உள்ள டம்ளரில் கொட்டவும்.

6. ஃபுட் கலரில் தண்ணீரில் இறங்கும் போது வெடித்து சிதறுவது போல் காட்சி தரும்.

“வாவ் எப்படி பிண்டு இது? ஜாலியாவும் இருக்கும், சேஃப்டியாவும் இருக்கு” என வியந்தாள் அனு.

mathappu

அறிவியல் உண்மைகள்

ஃபுட்கலர் எண்ணெயில் கரையாது. தண்ணீரில் மட்டுமே கரையும். எனவே எண்ணெயில் உள்ள கலரை தண்ணீரில் கொட்டும் பொழுது, எண்ணெய் தண்ணீரின் மேலேயே நிற்க, கலர் மட்டும் தண்ணீரின் கீழ் நோக்கிச் செல்லும். இதைக் காண்கையில் மத்தாப்பு வானில் வெடிச்சுச் சிதறுவது போல் இருக்கும்.

வெவ்வேறு விதமான வண்ணங்களை தனித்தனி டம்ளர் எண்ணெயில் கரைத்து வைத்துக் கொண்டு இந்த சோதனையை செய்து பாருங்கள். இன்னும் அழகாய் மகிழ்ச்சியாய் இருக்கும்.

“என்ன குழந்தைகளே! தண்ணீர் மத்தாப்பினை நீங்களும் செய்து பார்த்து மகிழ்வீர்கள் தானே! நீங்கள் செய்யும் சோதனைகளை மறக்காமல் எங்களுக்கு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்.அடுத்த மாதம் வேறொரு சுவையான அறிவியல் சோதனையோடு உங்களை சந்திக்கிறேன்” என பிண்டுவோடு சேர்ந்து அனுவும் விடை பெற்றாள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments