குழந்தைகளே, இன்னைக்கு உங்களோட கைகளை சுவடு எடுத்து, அந்த கைச் சுவட்டினை அழகிய சேவலாக மாற்றலாமா?
உங்கள் கைகளை ஒரு வெள்ளைக் காகிதத்தில் வைத்து, அதை சுவடு எடுத்துக்கோங்க. அடுத்து, பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் சுவட்டுக்கு இடையில், கோழியின் மேல் அலகினை வரைந்து கொள்ளுங்கள். கோழியின் கழுத்துப் பகுதியையும் வரைந்து முடித்து விடுங்கள். இப்போது, வண்ணம் தீட்டி முடித்து விடுங்கள். இப்போது, நீங்கள் உங்களது கைச் சுவட்டினைக் கொண்டே அழகிய கோழி வரைந்து விட்டீர்கள்.
