தமிழ் மொழியாம் தமிழ் மொழி
தனி மொழி நம் தாய்மொழி!
உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும்
உயிர்மெய்யாம் எழுத்தும் உண்டு!
பழமையான தமிழ் மொழியும்
பாருக்குள்ளே சிறந்த மொழி!
ஈரடியில் குறளும் உண்டு!
நாலடியில் பாக்கள் உண்டு!
கம்பன் அன்று கவி படைத்தான்!
வள்ளுவனும் குறள் படைத்தான்!
அவ்வையுமே பாடிச் சென்றாள்!
பாரதியும் போற்றி நின்றான்!
ழகரமெனும் சிறப்பு கொண்ட
செம்மொழியாம் தமிழ்மொழி!
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தே
சிங்கங்களாய் வீறு கொண்டோம்!
எண்ணில்லாத பெருமைகளும்
எண்ணி எண்ணி வியக்கிறோமே!
தங்கமான குழந்தைகளே!
தாய்த் தமிழைப் போற்றிடுவீர்!
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.