சிம்பாவின் சுற்றுலா

ஆசிரியர்:- ரமணா (ஆறு வயது)

வெளியீடு:- வானம் பதிப்பகம்,  சென்னை.-89.

விலை:- ₹150/-

https://www.commonfolks.in/books/d/simbavin-sutrulaa

தமிழில் குழந்தைகளுக்காகக் குழந்தை படைப்பாளர்களே எழுதும் போக்கு அண்மையில் பெருகியிருப்பது, வரவேற்க வேண்டிய நல்ல விஷயம். குழந்தை படைப்பாளர் ரமணா, தம் ஆறுவயதில் எழுதிய நாவலிது.. 

சிம்பா என்ற சிங்கமும், பாரதி என்ற பையனும், சுற்றுலா செல்கிறார்கள். காலங்காலமாகச் சிங்கத்தைக் காட்டுக்கு ராஜா என்றும், மற்ற விலங்குகளை வேட்டையாடிக் கொன்று தின்னும் என்றும் தாம் கதை கேட்டுப் பழகியிருக்கிறோம். ஆனால் இந்தக் கதையில் சிங்கம், ஜாலியாகச் சிறுவனுடன் சுற்றுலா செல்கிறது.  வனிதா என்கிற பெண்ணிடம் சென்று, நண்பனுடன் சேர்ந்து, முகத்தில் வண்ணம் பூசி மகிழ்கின்றது.    

மரத்தில் மீன் காய்த்துத் தொங்குவதாகவும், ஒரு கோழி நூறு முட்டைகளைப் போடுவதாகவும் தங்குத் தடையின்றிக் கற்பனைக் குதிரை சிறகடித்துப் பறக்கின்றது.   சிறார் கதைப் புத்தகங்களின் பெயர்களையே சுற்றுலா போகின்ற இடங்களுக்குத் தேர்வு செய்திருப்பது புதுமை!

ஆங்கிலப் புத்தகம் போல், தரமான வண்ண ஓவியங்களுடன் கூடிய பதிப்பு. குழந்தைகளுக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும்.  6 முதல் 12 வரை வயதினருக்கேற்ற சிறார் நாவல்.

ஆசிரியர் ரமணா அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்! அவசியம் சிறுவர்க்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *