காட்டில் இருந்து வீட்டுக்கு விலங்குகள்

ஆசிரியர்:- ஜி.சரண் (ஜி.சரவணன் பார்த்தசாரதி)

வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18.

விலை:- ஒவ்வொன்றும் ₹30/-

இந்த நூல், இரண்டு பாகமாக வெளியாகியுள்ளது.  முதல் பாகத்தில் நாய், ஆடு, செம்மறி ஆடு, பன்றி, மாடு ஆகியவை குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன.  இரண்டாம் பாகத்தில் பூனை, கினியா பன்றி, கழுதை, எருமை, ஒட்டகம் ஆகியவை பற்றி, ஆசிரியர் விவரித்திருக்கின்றார்.

வீராச்சாமி என்ற பெயருடைய வேளாண் விஞ்ஞானிக்கும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் ஐவருக்கும், நடக்கும் உரையாடல் மூலமும், கேள்வி பதில் மூலமும், ஆசிரியர் காட்டில் இருந்து வீட்டுக்கு வந்த விலங்குகளைப் பற்றிய பல அறிவியல் செய்திகளை விளக்கியுள்ளார்.

நாய், ஆடு, மாடு போன்று, இன்று வீட்டில் வளர்க்கும் பிராணிகள், எந்தெந்த விலங்குகளிடமிருந்து தோன்றியவை? காட்டில் வாழ்ந்த விலங்குகளை, மனிதன் வீட்டுக்கு, எப்போது, எப்படிக் கொண்டு வந்தான்? இன்றைய நாய்கள் சாம்பல் நிற ஓநாய்களிடமிருந்து தோன்றியவை, பன்றிகள் மிகவும் சுத்தமான விலங்குகள்; துரதிர்ஷ்டவசமாக, நம்மூரில் சாக்கடை நீர் தான் அவைகளுக்குக் கிடைக்கிறது என்பன போன்ற அறிவியல் தகவல்கள் அடங்கிய நூல்கள்.

மேலும் இந்த விலங்குகளின் அறிவியல் பெயர்கள், இவற்றின் மூதாதையர் எவை என்பன போன்ற செய்திகளும் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளன..  இவை இரண்டும் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களின் வாசிப்புக்கேற்றவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *