ஹாய் சுட்டீஸ்!

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? உங்க முழு ஆண்டுத் தேர்வுகள் எல்லாம் முடிஞ்சு லீவு விட்டாச்சா?

லீவுல எல்லாரும் சமத்தா அம்மா அப்பா பேச்சை கேட்டு வீடியோ கேம்ஸ் விளையாடாம வெளிய விளையாடுங்க.. ஆனா வெயில்ல விளையாடாதீங்க.

சரி! நம்ம குட்டி சச்சின் என்னென்ன கத்துகிட்டான்னு பாக்கலாமா?

அவன் புதுசு புதுசா நிறைய கத்துகிட்டான்.

புறா முட்டை போட்டு குஞ்சு பொறிச்சு அந்த குட்டிப்புறா பறக்க கத்துக்கறத பார்த்து அவனுக்கு ரொம்ப ரொம்ப ஆச்சர்யமா இருந்ததுல்ல.. அத பத்தி அம்மா கிட்ட கேட்டு கேட்டு இன்னும் நிறைய கூகிள் செய்து புறாக்களோட குணங்கள் பத்தி நிறைய கத்துகிட்டான்.

புறாக்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவை.. அதுவும் வேற வேற மனித முகங்களை நல்லா அடையாளம் வெச்சிக்குமாம். மனிதர்களைப் போலவே அம்மா அப்பா குழந்தைகள்ன்னு தனித் குடும்பமா இருந்தாலும் ஒரே கும்பலா கூட்டு குடும்பமாதான் வாழுமாம். குடும்பத்தில அம்மா அப்பா ரெண்டும் வேலைகளை சரியா பகிர்ந்துக்குமாம். அதாவது அம்மா புறா முட்டையை பகல் முழுக்க அடைகாக்கும். அப்பா புறா பகல்ல இரை தேடி எடுத்து வந்து அம்மா புறாவுக்கு கொடுத்துட்டு இரவு முழுக்க அடைகாக்கும்.   அம்மா புறா இரவுல ஓய்வு எடுத்துக்கும்.

முட்டை பொறிஞ்சு குட்டி புறா வெளிய வந்து கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்ததும் அம்மா அப்பா மற்ற புறாக்கள் எல்லாம் சேர்ந்து அதுக்கு நடக்கவும் பறக்கவும் கத்து கொடுக்கும்.

இப்படி புறாக்களோட வளர்ச்சியை பத்தி நிறைய தெரிஞ்சிகிட்டான் நம்ம குட்டி சச்சின்.

அவனுக்கு பறவைகளோட வாழ்க்கையைப் பத்தி இன்னும் நிறைய கத்துக்கணும்னு ஆசை வந்தது.

அது மட்டுமில்லாம செடி கொடிகள் மரங்கள் பூக்கள் மண் வளம் இப்படி நிறைய கத்துக்க ஆசைப்பட்டான்.

பெரியவனானதும் ஆர்னித்தாலஜி (ornithology) அதாவது பறவைகளைப் பற்றிய படிப்பைதான் படிக்க போறேன்னு சொல்லிட்டிருக்கான்.

நீங்கல்லாம் பெரிசா ஆகி என்ன படிக்க போறீங்க? எல்லாம் கமென்ட்ல சொல்லுங்க.

நா அடுத் இதழ்ல இருந்து வேற ஒரு கதைத் தோரத்தோட வரேன்.

அது வரைக்கும் சமத்தா இருங்க சுட்டீஸ்!

பை! பை! டாட்டா! டாட்டா!

👋👋👋👋👋👋👋👋👋

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments