வணக்கம் குழந்தைகளே!

ஒரு ஊர்ல கபிலன்னு ஒரு பையன் இருந்தானாம், அவன் 4ம் வகுப்பு படிச்சிட்ருந்திருக்கான், தினமும் அவங்க வீட்ல வந்து நகைச்சுவையா ஏதாவது சொல்வானாம். எல்லாரும் சிரி சிரின்னு சிரிப்பாங்களாம். அவனுக்கும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்குமாம்.

இவன் இந்த மாதிரி நகைச்சுவையா சொல்ல ஆரம்பிச்சு அப்புறம் வீட்டு பெரியவங்களுக்கும் கொஞ்சம் இறுக்கமான மனநிலை இல்லாம எதோ ஒரு நல்ல சூழல் இருப்பதை உணர முடிஞ்சிருக்கு. அவனோட தாத்தா, கபிலன் கிட்ட போய் எப்படி உனக்கு தினமும் ஒரு காமெடி சொல்லணும்னு தோணுச்சுனு கேட்ருக்காங்க.
அதுக்கு நம்ம கபி சொன்னானாம், “சிரிப்பொன்றே வாழ்விற்கு மருந்து”ன்னு எங்க டீச்சர் சொன்னாங்க. தினமும் சிரிச்சா நாம மருந்தே குடிக்க வேண்டியிருக்காதுன்னு சொன்னாங்க. எனக்கு மருந்துன்னா பயமா, அதான் தினமும் நாம சிரிக்கிறதுக்காக ஒரு காமெடி எங்க டீச்சர் கிட்ட கேட்டுட்டு வர்றேன். இப்போ அவங்க எனக்கு ஒரு நகைச்சுவை கலந்த கதை புத்தகம் வாங்கி தர்றேன்னு சொல்லிருக்காங்க”.

Jokes

தாத்தாக்கு ரொம்ப மகிழ்ச்சி. “கபி குட்டி, தாத்தாக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. சிரிப்பொன்றே வாழ்விற்கு மருந்து , அதை சிந்தனை தேன் கலந்து அருந்து”ன்னு நான் படிச்சது ஞாபகம் வருது. இனி தாத்தாவும் உனக்கு சிரிக்க வைக்க குறிப்புகள் தர்றேன்.

விளையாடும்போது நிறைய சிரிக்க வாய்ப்பு இருக்கு. நாம ஒரு வட்டம் போட்டு உள்ளே வெளியே விளையாடலாம். உள்ளே வெளியே உள்ளே வெளியே னு சொல்லிட்டே இருக்கும்போது திடீர்னு இரண்டு முறை உள்ளே உள்ளே னு சொல்லிட்டா வழக்கம் போல வெளிய சில பேர் குதிச்சிருப்பாங்க, சிலர் குதிக்க அசைஞ்சு அப்புறம் அப்படியே சுதாரிச்சு நிப்பாங்க, இதுக்குள்ள எல்லாரும் கண்டிப்பா சிரிக்கவும் செஞ்சிருப்பாங்க, இப்படி நாம விளையாடி சிரிக்கும்போது நாம நுரையீரலுக்கும் நல்ல பயிற்சியா அமையும்.”

“சூப்பர் தாத்தா, கேட்கவே ஜாலியா இருக்கு, இனி தினமும் நாம சிரிக்கிறதுக்காகவே எதாவது கண்டிப்பா பண்ணலாம்.” அப்படின்னு உறுதி மொழி எடுத்துகிட்டாங்க.

என்ன குழந்தைகளே நீங்களும் தினமும் சிரிக்கவும் சிரிக்கவைக்கவும் முடிவு பண்ணிட்டிங்களா? சிரிப்பின் முக்கியத்துவத்தையும் புரிஞ்சிருப்பீங்கன்னு நினைக்கிறன். சில நோய்களை சிரிக்க வைத்து சரி பண்ண முடியுமாம். சிரிக்கிறது மூலமா நாமும் இன்னும் உற்சாகத்தோடு வாழலாம். சிரிப்பை பத்தி படிக்கிறதுக்குன்னே ஒரு படிப்பு கூட இருக்காம்(Gelotology ).

What’s your Reaction?
+1
4
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments