குழந்தைகளே, இன்றைக்கு பல்வேறு வடிவங்கள் கொண்டு அழகிய டைனோசர் செய்யலாமா ?

வண்ணக் காகிதங்களில், அரை வட்டம், சதுரம், முக்கோணம் ஆகிய வடிவங்களை, வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
சற்றே பெரிய அரைவட்டத்தை, டைனோசரின் உடலாக பயன்படுத்தவும்.
சதுரத் துண்டுகளை வைத்து, டைனோசருடைய தலை, கால்கள் மற்றும் வால் பகுதிகளை ஒட்டவும்.
அடுத்ததாக, டைனோசரின் முதுகில் இருக்கும் கொம்பு போன்ற வடிவங்களுக்கு, முக்கோணங்களை ஒட்டுங்கள்.
இப்போது, உங்கள் அழகிய ஸ்டெகோசாரஸ் (stegosaurus) வகை டைனோசர் தயார்.