ஆசிரியர் க.சரவணன்
வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை.
விலை ரூ 40/-.
தற்போது குழந்தைகள் வெறுக்கும் இடமாக இருக்கும் பள்ளிக்கூடத்தை, அவர்கள் விரும்பும் இடமாக மாற்ற, அவர்களுக்குப் பிடித்த விலங்குகளைக் கொண்டு பள்ளிக்கூடத்தை உருவாக்கியிருக்கிறார் இச்சிறுவர் நாவலின் ஆசிரியர் க.சரவணன்.
தலைமையாசிரியராக சிங்கம் இருக்கக்கூடாது என்ற 4 ஆம் வகுப்பு மாணவனின் ஆசைப்படி, குள்ளநரியைத் தலைமை ஆசிரியராக ஆக்கியிருக்கின்றார். ஒட்டகசிவிங்கியும், காண்டாமிருகமும் ஆசிரியராக இருக்கும் அப்பள்ளியில், சிங்கம், சிறுத்தைப்புலி, கரடி,மான்,யானை, முயல்,கழுதைப்புலி போன்ற விலங்குகள் படிக்கின்றன.
விலங்குகள் அனைத்தும் ,மந்திரக்கயிறு மூலமாகத் தங்கள் உருவத்தை மறைத்துக் கொண்டு, பக்கத்திலுள்ள நகரத்துக்குச் சென்று, மனிதர்களின் உணவுப் பழக்கத்தைக் கவனித்து விட்டுக் காடு திரும்புகின்றன. மறுநாள் பள்ளியில் அதைப் பற்றி விரிவாக விவாதிக்கின்றன. செயற்கை வண்ணங்கள் ஏற்றப்பட்ட உணவுப்பண்டங்கள் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்ற கருத்தை, இந்த விவாதம் மூலம் சிறுவர் மனதில் பதிய வைக்கிறார் ஆசிரியர்.
இடையில் சில ஆப்பிரிக்க கதைகளும், இதில் சேர்க்கப்பட்டுள்ளன. வாசிக்கத் தோதாக எளிய நடையில், அமைந்துள்ள சிறுவர் நாவல்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.