குழந்தைகளே, இன்னைக்கு நாம் அழகான ஜோடிப் பறவைகள் செய்யலாமா?
தேவையான பொருட்கள்
நிலக்கடலை ஓடுகள் – 2
தடிமனான அட்டை அல்லது தெர்மாகோல் அட்டை 1
வண்ணங்கள்
செய்முறை
அட்டையில், நீங்கள் விரும்பியவாறு மரங்கள் மற்றும் கிளைகள் வரைந்து கொள்ளுங்கள்.
அடுத்து, மரக்கிளையில், நாம் எடுத்து வைத்திருக்கும் நிலக்கடலை ஓடுகளை, எதிரெதிராக ஒட்டிக் கொள்ளுங்கள். அதாவது, இரண்டு பறவைகளும் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்று ஒட்டிக் கொள்ளுங்கள்.
பறவைகளின் கண் மற்றும் அலகுகள் வரைந்து கொள்ளுங்கள். ஓட்டின் மேல் சிறு இறகும் வரைந்து கொள்ளுங்கள்.
இப்போது, அழகிய பறவைகள் தயார்.
செய்து பார்த்துவிட்டு, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
குழந்தைகளே.