வணக்கம் குழந்தைகளே!

ஒரு பேப்பர் பேனா எடுத்துக்கோங்க, அதுல உங்களுக்கு அவசியம் தேவையான 4 விஷயங்களை எழுதிக்கோங்க.

1.
2.
3.
4.

எழுதிட்டிங்களா ?

நீங்க எழுதுன 4ம் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

checklist


சரி, உங்களுக்கு தேவையானது கிடைக்கணும்னா, அதற்கு நீங்கள் முயற்சி எடுப்பீங்க இல்லையா? உங்களுடைய எந்த ஒரு முயற்சியும் நல்ல முறையில் அமைய உங்களுக்கு 4 அடிப்படை விஷயங்கள் வலிமையா அமையனும். அது என்ன அவ்வளவு வலிமையான விஷயங்கள் ?

  1. நல்ல தூக்கம்
  2. நல்ல உடற்பயிற்சி
  3. சத்தான உணவு உண்ணுதல்
  4. நல்முறையில் அணுகும் விதம்

“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” அப்படின்னு சொல்லிருப்பாங்களே, கேட்டுருக்கீங்களா?

அந்த சுவர்தான் இந்த 4 தூண்கள்.
அதாவது நம் உடலும் மனமும் நல்லா இருந்தாதான் நம்மளால எதுவும் செய்ய முடியும்.

நம் உடல் நல்ல முறையில் இயங்க, நாம நல்லா தூங்கணும். இரவு தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பே படிப்பு, கைபேசி , கணினி எல்லாம் நிறுத்தி விட்டு அந்த நாளை உங்களுக்கு குடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லி, அன்னைக்கு உங்களுக்கு உதவியா இருந்த எல்லாருக்கும் நன்றி சொல்லி நன்றியுணர்வோடு மகிழ்ச்சியா தூங்க போகணும். அப்படி பண்ணா தூங்கும்போது கனவு தொல்லையோ, பயமோ இல்லாம தூங்கலாம். வேறு உடல் உபாதைகள் தூக்கத்தில் இருந்தால் பெற்றோரிடம் சொல்லி அதை தீர்த்து கொள்ளுங்கள் தங்கங்களே!

நல்லா உடற்பயிற்சி செய்தால், உடல் இரத்த ஓட்டம் சீராகி உடல் புத்துணர்ச்சி பெறும். விளையாடுவது, மிதிவண்டி ஓட்டுவது, கொஞ்ச நேரம் நடப்பது என உங்களால் முடிந்த உடற்பயிற்சியை தினமும் செய்யுங்கள்.

வீட்டில் கொடுக்கும் பழங்கள் , காய்கறிகள், கீரைகள், பண்டங்களை மகிழ்ச்சியோடு ருசித்து சாப்பிடுங்கள். உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என சொல்லி தினமும் எதோ ஒரு ஆரோக்கியமான உணவை கண்டிப்பாக ருசித்து சாப்பிடுங்கள் குழந்தைகளே. நான் ரசித்து சாப்பிடுவதையெல்லாம் சொல்லட்டுமா?
கேரட், வாழைப்பழம்,கொய்யா பழம், பயறு வகைகள், சுண்டல், நிலக்கடலை, உலர் திராட்சை, ராகி தோசை, இன்னும் நிறைய பட்டியல் பெருசு. நீங்க உங்களுக்கு பிடித்ததை பட்டியல் போட்டு அம்மா அப்பாவிடம் கொடுக்கிறீங்களா?

அப்புறம், எந்த ஒரு விஷயத்தை அணுகும்போதும் அமைதியோடு அணுகி பாருங்கள். கத்துவதையோ, அழுவதையோ, கோப படுவதையோ தவிர்த்து விடுங்கள் குட்டிஸ், அமைதியாக இருக்கும்போது உங்களுக்கான தீர்வு கிடைப்பது எளிதாக இருக்கும். நீங்கள் அமைதியை இழந்தால் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உங்களால் தெளிவாக சொல்ல முடியாது. அதை பற்றி நல்ல முறையில் யோசிக்க அமைதி மிக முக்கியம் செல்லங்களே.

4 தூண்களையும் நல்ல முறையில் வளர்த்து அதன் மேல் உங்கள் கனவு கோட்டைகளை கட்டி சாதிக்க வாழ்த்துக்கள் சிட்டுக்களே:)

What’s your Reaction?
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments