இன்று குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின், பிறந்த நாள் நூற்றாண்டு 07/11/2022 அன்று நிறைவு பெற்றது. இவர் புதுக்கோட்டை இராயவரத்தில் பிறந்தார்.
இவர் குழந்தைகளை மிகவும் நேசித்ததோடு, தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கும் ஆற்றியிருக்கிறார். இவரது காலம் ‘தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் பொற்காலம்’ எனப் போற்றப்படுகின்றது.
இந்தியன் வங்கியில் பணி செய்த இவர், பாலர் மலர்’, ‘டமாரம்’, ‘சங்கு’ ஆகிய சிறுவர் பத்திரிகைகளில் கௌரவ ஆசிரியராகவும், ‘பூஞ்சோலை’ இதழின் ஆசிரியராகவும் இருந்தார். பணி ஓய்வுக்குப் பிறகு, ‘கோகுலம்’ இதழின் ஆசிரியராகவும், சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். குழந்தை எழுத்தாளர் சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை நிறுவி, எட்டுக் குழந்தை இலக்கிய மாநாடுகளை நடத்திச் சாதனை படைத்தார்.
அழ.வள்ளியப்பா குழந்தைகளுக்காக 2000 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியிருக்கிறார். மாம்பழமாம் மாம்பழம்’, ‘வட்டமான தட்டு, தட்டு நிறைய லட்டு’ போன்ற, இவருடைய பல பாடல்களைப் பாடி வளராத தமிழ்க் குழந்தைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இவை பிரபலமானவை. மேலும் குழந்தைகளுக்காகக் சிறுகதை, விடுகதை விளையாட்டு, விலங்கியற் கட்டுரை, தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, கேள்வி பதில் போன்ற பல வகைமைகளில் எழுதியுள்ளார்.
இவர் படைப்புகள் அனைத்தும், நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதால், இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.