ஒரு காட்டுல பெரிய குளம் இருந்திச்சாம்.. அது நிறைய, நிறைய்ய மீன்கள் இருந்துச்சாம். அந்த மீன்களெல்லாம் ரொம்ப சந்தோசமா இருந்ததாம்.

அப்ப அந்த குளத்துல ஒரு ஷார்க் வந்ததாம். அந்த ஷார்க் டெய்லி மீன் எல்லாம் புடிச்சு புடிச்சு சாப்டுச்சாம்..

அதனால மீன்களெல்லாம் ரொம்ப பயந்துருச்சாம். ஒரு நாள் கடல் வேட்டைக்காரங்கள் வந்தாங்களாம்.

அவங்க அந்த தண்ணிக்குல்ல இறங்கி அந்த ஷார்க்க பிடிக்க பாத்தாங்களாம்..

ஆனா அந்த ஷார்க்க யாராலயும் பிடிக்கவே முடியலையாம்.

நிறைய கடல் வேட்டைக்காரங்கள் வந்தும் அந்த ஷார்க் யாருகிட்டயும் மாட்டவே இல்லயாம்..

Kavin kadhai
படம்: அப்புசிவா

அப்பறம், ஒரு தேவதை கடல்ல்ல இருந்து எழுந்து வந்தாங்களாம். அவங்க ஷார்க்க அடிச்சிட்டாங்களாம்.

ஆனாலும் ஷார்க்குக்கு ஒன்னுமே ஆகலயாம். அது இன்னும் நிறைய மீன்கள சாப்டுச்சாம்..

ம்மா.. இந்தோ இப்டி கண்ல வச்சு பாப்போம்லம்மா அது பேரு என்னம்மா?

ம்ம் லென்ஸா?

ம்ம் ஆமாம்மா..

அப்பறம் ஒரு நாள் சூரியன் ரொம்ப கோபப்பட்டு மலைக்கு உள்ள இருந்து வந்துச்சாம்..

அப்ப அந்த தேவதை அந்த லென்ஸ இப்டி காட்டுனாங்களாம்.. உடனே சூரியன்ல இருந்து வந்த லைட்.. அந்த லென்ஸ் வழியா இப்டி வரும் போது நெருப்பா மாறிடுச்சாம் 🔥

அந்த நெருப்பு போய் ஷார்க் மேல விழுந்ததும் ஷார்க்க் குட்டி மீனா மாறி கடல் தண்ணில விழுந்திருச்சாம்.

அதுக்கப்பறம் அந்த கடல்ல இருந்த மீன்கள யாருமே சாப்டலயாம். அந்த மீன்கள்ளாம் ரொம்ப சந்தோசமா இருந்தாங்களாம்.

What’s your Reaction?
+1
2
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments