அதோ பார் அதோ பார்
அழகான கோட்டை பார்
அரிசி போன்ற பூச்சி கட்டும்
அசுரக் கோட்டை அங்கே பார்
குன்று போல காட்சிதரும்
கரையானின் புற்றினைப் பார்
மழையும் புயலும் வந்தாலும்
கரையாமல் நிற்பதைப் பார்
கோடிக்கணக்கில் கூடிவாழும்
பூச்சிகளின் ஒற்றுமை பார்
கூடிக் கூடி ஒன்றிணைந்து
கோட்டை கட்டும் அழகைப் பார்.
தேடித் தேடி உணவுதனை
சேகரிக்கும் திறமை பார்
கோபம் வந்தால் கொடுக்கினாலே
கடித்து விரட்டும் வீரம் பார்
கட்டளைகள் ஏதுமின்றி
கடினமாக உழைக்கும் பார்
உறுதியான மரங்களையும்
உலுத்துப்போகச் செய்யும் பார்
அதோ பார் அதோ பார்
அழகான கோட்டை பார்
அரிசி போன்ற பூச்சிகளின்
அசுரக் கோட்டை அங்கே பார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1