ஓவியத்தொடர்
படம் வரைய போலாமா நண்பர்களே.
இந்த மாதம் எளிமையான ஒரு விஷயத்தை பார்ப்போம்.
கொஞ்சம் நாள் முன் வரை, சில இடங்களில் தற்போதுகூட சினிமா கதாநாயகர்களின் கட்அவுட்கள், அரசியல் தலைவர்களின் கட்அவுட்கள் பார்த்திருப்பீர்கள். எவ்வளவு பெரிய உருவங்கள்? பல அடி உயரமான ஓவியங்கள். இதை எப்படி வரைகிறார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா?
சிலர் பார்த்த படங்களை, உருவங்களை அப்படியே வரைவார்கள். நாம் அதுபோல கற்றுக்கொள்ளமுடியுமா?
முடியும்.
நாம் எல்லோருமே கற்றுக்கொள்ளமுடியும். நான் கடந்த இரண்டு வருடங்களாக இதை கற்றுக்கொண்டிருக்கிறேன். இதற்கு கற்பனைத்திறன் ஏதும் தேவையில்லை. பொறுமையும், ஆர்வமும் மட்டும் இருந்தால் போதும். யாரை வேண்டுமானாலும் நீங்களும் அப்படியே வரையலாம்.
சிறுகச்செய்தல் என்று சொல்லலாமா, அப்படியும் சொல்லலாம். அல்லது கடினமான வேலையை பிரித்துச் செய்வது என்றும் சொல்லலாம்.
ஒரு உருவ ஓவியம், எளிதாக எடுத்துக்கொள்வோம்.
மேலே இருக்கும் படத்தை அளவு மாறாமல் அப்படியே வரைய வேண்டும். ஆரம்பத்தில் நான் வரைந்து பார்த்தபோது மேலே கண்ட குழந்தைக்கு பதில் காந்தி தாத்தாவை வரைந்துவிட்டிருந்தேன். ஹாஹா…
வரைந்து பாருங்கள். அப்படியே. எப்படி வேண்டுமானாலும் வரட்டும். ஓகே? கொஞ்சம் கோணல்மாணலாகத்தான் வரும். சிலருக்கு எளிதாகவும் வரலாம்.
கொஞ்சம் போய் கீழே இருக்கும் படத்தை கவனியுங்கள்.
இதை வரைய முடியுமில்லையா?
அட, ஈசிபா…
யெஸ். மேலே உள்ள படத்டின் ஒரு சிறு பகுதியே இது.
இன்னொன்று…
எளிதாக வரையலாம் இல்லையா?
இதை எப்படி செய்வது?
முதலில் உள்ள குழந்தை படத்தை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுங்கள். அதன் பின் அதை ஓரே அளவுள்ள கட்டங்களாக பிரியுங்கள். அதாவது ஒரு இஞ்ச் அளவு அல்லது இரண்டு இஞ்ச் அளவு என உங்கள் விருப்பம்போல.
இப்படி.
பிரித்து அடையாள எண் இடுங்கள்
அதன் பின் ஒரு வெள்ளைதாளில், இதே போல கட்டங்கள் போடுங்கள். தாளின் அளவு A4 இருக்கலாம். அல்லது ஒரு கட்அவுட் க்கு தேவையான நூறடி கூட இருக்கலாம். இதான் மேஜிக்.
இப்போது நீங்கள் கட்டம் வரைந்த தாளில் முதல் கட்டத்தை பூர்த்தி செய்யுங்கள். அதாவது a1 கட்டம். அடுத்து a2…. கடைசியாக e4 வரை.(அது செம்ம ஈசி…ல்ல?)
ஓவியம் தயார். முதலில் சரியாக வராமலும் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து முயற்சிக்க, ஒரு புகைப்படத்தைக்கூட உங்களால் அச்சுஅசலாக அழகாக வரையமுடியும்.
தொடரும்…
காமிக்ஸ்..இலக்கியங்களை படிக்க ஆர்வம். தற்போது கதைகளும் எழுதிவருகிறேன். ஓவிய ஆர்வமுண்டு. மூன்று குழந்தை புத்தகங்கள் உட்பட ஆறு புத்தகங்கள் kindle ல் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தைகள் நாவல் ஒன்று எழுதி வருகிறேன்.