சி.பி.முத்தம்மா (1924 – 2009)

சி.பி.முத்தம்மா கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில், விராஜ்பேட்டையில் பிறந்தவர். சென்னையில் பட்டப்படிப்பையும், பட்டமேற்படிப்பையும் முடித்தவர். 

இவர் சுதந்திர இந்தியாவில் இந்திய குடியுரிமைப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவர். 1949 ல் இந்தியாவின் வெளியுறவுத் துறையில், முதல் பெண் அதிகாரியாக வேலையில் சேர்ந்தார்.

அச்சமயம் வெளியுறவுத்துறையில் பணியிலிருக்கும் பெண் அரசின் அனுமதி பெற்ற பின்னரே, திருமணம் செய்து கொள்ள வேண்டும்; திருமணமான பின் குடும்ப பொறுப்புகள் காரணமாகப் பெண் அதிகாரி சிறப்பாகச் செயல்படவில்லை என்று அரசு கருதினால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இவை போன்ற இந்திய ஆட்சிப்பணியில் பெண்களுக்கு எதிராக இருந்த அரசின் விதிகளை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் முத்தம்மா.

இவ்வழக்கை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் விசாரித்தார். ஆணாதிக்க சிந்தனையில் விளைந்த, இந்த விதிகள் அரசியல் சாசனதுக்கு எதிரானது; ஆணும் பெண்ணும் சமம்; எனவே இவ்விதிகளை நீக்க வேண்டும் என்று அவர் தீர்ப்புக் கூறினார்.

இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் விளைவாகவே பெண்கள் ஆண்களுக்கு நிகராக, இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. இதற்காகப் பாடுபட்டவர் சி.பி.முதம்மாவே ஆவார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *