
அம்மா என்று நான் அழைக்கும்
ஆகச்சிறந்த ஆளுமையினாள்
இன்னல் தாங்கும் மனத்தினாள்
ஈடு இணையற்ற அறம் பழகுவாள்
உழைப்பை மட்டும் நம்புவாள்
ஊக்கமாய் நாளும் ஓடுவாள்
என் நலனை மட்டும் எண்ணுவாள்
ஏணியான நேர்மையினாள்
ஐயமின்றி எதற்கும் துணிந்திடுவாள்
ஒற்றைக்குடையில் ஒளிர்ந்திடுவாள்
ஓங்கி தழைக்கும் என் வாழ்வின்
ஒளடதம் என்றும் இவள் தானே! அன்பே அவள் ஆயுதமே!