thuravi 1

ரொம்ப  காலத்துக்கு  முன்னாடி  ஒரு  அழகான  தீவில்  ஒரு  துறவி   இருந்தார் . அந்த  துறவிக்கு  தங்கும் இடம் ஓன்றும்  இல்லை . அவரிடம்  சொத்து , பணம் , காசு  ,நிலம்  என்று  எதுவமே  கிடையாது .                                           

அவரது   உடமைககள்  என்பது , அவர்  அணிந்திருக்கும்  உடையும் , தன்  கையில்  வைத்து  இருக்கும்  ஒரு  மூட்டையும் தான் .   

துறவியோ  நாடோடி  மாதிரி  தான்  தன்  வாழ்க்கையைக் நடத்தி  வந்தார் . துறவியோ , ஒவ்வோரு  ஊராக சென்று  அங்கு  குகையிலோ  தவம்  புரிவார் . 10 அல்லது 15 நாட்கள்  ஒரு ஊரில் இருப்பார் . பின்னர் , வேறு  ஊருக்கு  செல்வதை  வழக்கமாக  கொண்டிருந்தார் .                                                                                                                            இந்த  துறவிக்கோ  ஒரு  சிறப்பம்சம்  உண்டு . யாரேனும்  இந்த  துறவியிடம்  சென்று  தன்  கஷ்டங்களை  சொன்னார்கள்  என்றால் , அதற்கான தீர்வினை  இந்த  துறவியோ  கூறுவார் . இவர்  கூறிய தீர்வினால்  பல  மனிதர்களின்  வாழ்வில்  முன்னேற்றங்களை கண்டனர் .   

   

thuravi 2

தாங்க  முடியாத  கஷ்ட்டங்களோடு  யாரேனும்  துறவியிடம்  வந்தார்கள்  என்றால்  அவர்களுக்கு  தான்  மூடையில்  இருந்து  .  துணிமணிகள் , பழங்கள் , பொன் நகைகள்  , புத்தகங்கள்  இந்த  மாதிரியான  பொருட்களை  கொடுப்பார் .    

thuravi 3

          இந்த  துறவியின்  சிறப்பம்சங்கள்  அந்த தீவு  முழுவதும்  வெகு  விரைவாக  பரவியது. எந்த கிராமத்திற்கு சென்றாலும் ஒரு மக்கள் கூட்டம் அந்த துறவியை காண செல்வார்கள் . தன்  குறைகளை , தன்  கஷ்டங்களை குறி அதற்க்கான தீர்வினை பெறுவார்கள் .        

thuravi 4

ஒருநாள் , கிராமத்திற்கு அந்த துறவி சென்றார் . அங்கு சென்று ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் இருந்து தவம் செய்ய ஆரம்பித்தார்  . அந்த கிராமத்திற்கு  துறவி வருகை புரிந்தது அங்கு இருக்கும் மக்களுக்கு காட்டுத்தீ போல் பரவதொடங்கியது . அங்கு சென்று கிராம மக்கள் துறவியிடம் தன் கஷ்டங்களை கூறி  அதற்கான தீர்வினை பெற்று  மனமகிழ்வோடு வீடு  திரும்பினர் .   

துறவியோ , எப்பொழுதும் போல   சிலருக்கு  தீர்வு  சொன்னார் . சிலருக்கோ தான் வைத்து   இருக்கும்  மூட்டையில்   இருந்து  பொருட்களை  எடுத்து கொடுத்தார்.   

thuravi 5

     ஒரு நாள்  வியாபாரி  ஒருவர் துறவியை காண சென்று. ,தன்  தொழிலில்  நஷ்டம். ஏற்பட்டதையும் அதனால் ஏற்பட்ட மிகுந்த மன உளைச்சலையும் அழுது கொண்டே  கூறினார் .  இதனை  கேட்ட  துறவியோ  தன்  கையில் உள்ள மூட்டையில்  இருந்து ஒரு மரப்பெட்டியை   எடுத்து அந்த வியாபாரியிடம்   கொடுத்தார் .    

thuravi 6

இதில், நான்கு  ரகசியம் இருக்கிறதுஇந்த  மரப்பெட்டியை  வீட்டில் சென்று தான்  திறக்க வேண்டும்  என்று கூறினார் துறவி .

வியாபாரியோ  , மன மகிழ்ச்சியோடு  மரப்பெட்டியை எடுத்துக்கொண்டு துறவியிடம்  இருந்தது  விடைப்பெற்றர்.அந்த மரப்பெட்டியை பூஜை அறையில் வைத்து திறந்து பார்த்தார் வியாபாரி.  

thuravi 7
thuravi 8
thuravi 9

அந்த பெட்டியில்  ஒரு மணி , ஒரு ரூபாய் நாணயம், சிப்பி மற்றும் முத்து  என  நான்கு  பொருட்கள் இருந்தது .   இதனை  கண்டவுடன்  வியாபாரிக்கோ ஒன்றுமே புரியவில்லை  .ஆனால் , இந்த  பெட்டியில் ரகசியம் என்று கூறினாரே துறவி என்ற ஆழ்ந்த சிந்தனையுடன் வியாபாரி இரவு தூங்கவில்லை .    

thuravi 10

மறுநாள்  காலையில்  அந்த வியாபாரி , துறவியை  காண அவர் வசிக்கும் இடத்திற்கு அந்த மரப்பெட்டியை  எடுத்து கொண்டு வந்தார். வியாபாரி , அந்த  மரப்பெட்டியை திறந்து துறவியின் முன்னாள் வைத்துவிட்டு பின்னர் , இதில் நான்கு  பொருள்கள் இருக்கிறது . எந்த நான்கு  பொருள்களும் நான்கு ரகசியத்தை கூறும் என்று சொன்னிர்கள் . ஆனால் , ஒன்றுமே என்னக்கு  புரியவில்லை  என்றார்  வியாபாரி .

துறவியிடம் கேட்ட உடன் துறவியோ புன்னகை செய்தார் . ஒவ்வொரு ஊருக்கு  செல்லும் போதும்   நீ  சொன்னபடி  சிலர்  தன்  கஷ்டங்களை என்னிடம் கூறுவது  வழக்கம் . நானும்  அவர்களுக்கு உனக்கு  கொடுத்த மாதிரியே மரப்பெட்டியை  அவர்களுக்கும் கொடுப்பேன் .  ஆனால் , இதுவரை  என்கிட்ட யாருமே  திருப்பி  வந்து கொடுத்ததில்லை.

ஆனால் , நீ மட்டும்  தான்  இந்த  மரப்பெட்டியுடன்  திரும்பி  வந்திருக்கின்றாய் . அதனால் , இந்த  நான்கு  ரகசியத்தையும்  சொல்லுகின்றேன்  நன்றாகக்கேள், மணி – நேரத்தையும், ஒருரூபாய்நாணயம் – பணத்தையும், சிப்பி மற்றும் முத்து  -வார்த்தைகளையும் குறிக்கும் .

எவன் ஒருவன்  தன்  நேரத்தை  சரியாக கையாளுகின்றானோ , அவன்  ஒருவனே  தன்  வாழ்க்கையையும்  சரியாக  கையாளுகின்றான் .

எவன் ஒருவன் தன்  செல்வத்தை  செல்லவு  செய்கிறானோ அவனிடம் இருந்து செல்வம்  நீங்காது .

எவன் ஒருவன் தன்  வார்த்தைகளை சரியான நேரத்தில் , சரியான நபரிடம் பயன்படுத்துகின்றானோ  அவன் மட்டுமே தனக்கு  கிடைக்கும் வெற்றியை   தக்க வைத்து கொள்கிறான் .

நான்காவது ரகசியம்  முதல் மூன்று  ரகசியத்தையும்  கேட்டால் மட்டும்  போதாது  இதனை  வாழ்வில் செயல்படுத்தினால்  மட்டும் தான்  வெற்றி  கிடைக்கும் .

இன்று  இதை  வாசிக்கின்ற  நாமும் நேரம் , பணம் , வார்த்தைகள்   இவை  மூன்றையும்  சரியாக  பயன்படுத்தி  நம்  வாழ்விலும்  வெற்றி  என்னும் கனியை  பெறுவோம் . 

thuravi 11
What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments