என்ன சுட்டீஸ்? எல்லாரும் எப்டி இருக்கீங்க? 

இந்த மாதத்தில இருந்து நான் உங்களுக்கு கதை சொல்றது கூடவே சில கைவினைப் பொருட்களும் செய்ய கத்து குடுக்கப் போறேன். கத்துக்க நீங்க ரெடியா? 

இந்த மாதம், நான் உங்களுக்கு புக் மார்க் / Book mark செய்ய கத்து குடுக்க போறேன். 

புக் மார்க் / Book mark ன்னா என்ன தெரியுமா? 

புக் மார்க்ன்னா, நாம  புத்தகம் படிக்கறப்ப நடுவில வேற வேலையா எழுந்து போவோம்ல.. அப்ப, நாம படிச்சுகிட்டு இருந்த பக்கத்தில அடையாளத்துக்கு ஒரு சிறிய குறியீடு மாதிரி சின்ன அட்டையையோ பேப்பரையோ வைப்பது வழக்கம். அந்தக் குறியீட்டு அட்டைக்கு பெயர்தான் புக் மார்க். 

இதற்கு தேவையான பொருள், ஒரே ஒரு காகிதம் மட்டும்தான். 

இந்த புக் மார்க்கை நீங்க ரொம்ப ஈசியா உங்க கையாலயே செய்துடலாம். 

இதைச் செய்ய உங்களுக்கு கத்தரிக்கோல் / scissors, ஒட்டுவதற்கு பசை / gum எதுவும் தேவையே இல்லை. 

என்ன? அதை எப்டி செய்யறதுன்னு பார்க்க ஆவலா இருக்கா? வாங்க! அதை எப்டி செய்யறதுன்னு சொல்றேன். 

முதல்ல ஒரு பேப்பர் அதாவது ஒரு காகிதம் எடுத்துக்கோங்க. அது என்ன காகிதமா வேணும்னாலும் இருக்கலாம். செய்தித்தாள் காகிதமோ, இல்ல உங்க பழைய நோட் புக்ல இருந்து கிழித்த காகிதமோ  ஏற்கனவே எழுதினதோ விளம்பரமா வர பிட் நோட்டீஸ் பேப்பராகவோ எது வேணும்னாலும் எடுத்துக்கோங்க. 

காகிதத்தின் நான்கு முனையும் A B C D ன்னு வெச்சுக்கோங்க. 

B முனையை A & D பக்கத்தில வர மாதிரி குறுக்கில அதாவது டயக்னலா மடிக்கணும். இப்ப உங்களுக்கு E & F கிடைக்கும். (படம் – 1)

E & F இடத்தில மடிச்சி அதை கிழிச்சிடுங்க. 

இப்ப உங்களுக்கு A B E F  ன்னு ஒரு சதுரம் கிடைக்கும். 

B முனையையும் E முனையையும் தனித் தனியா O வரை மடிங்க. இதுதான் X – Y மடிப்பு. (படம் – 2)

அடுத்ததா (X – O), (Y – O) ஆகிய இரண்டு மடிப்புகள் மடிச்சுக்கோங்க. (படம் – 2)

Pic – 1

bookmark 1

Pic – 2

bookmark 2

இப்ப உங்களுக்கு  பாக்கெட் மாதிரி ஒண்ணு கிடைக்கும். 

இந்த இரண்டு (X – O), (Y – O) மடிப்புகளையும் அந்த பாக்கெட் மாதிரி பகுதிக்குள்ள மடிச்சுட்டா உங்க புக் மார்க் தயார். 

நீங்க தயார் செய்த புக் மார்கை உங்களுக்கு பிடிச்ச மாதிரி நீங்க வரைந்து அழகுபடுத்திக்கலாம். 

bookmark1
bookmark2
bookmark3

என்ன சுட்டீஸ்? புக் மார்க் செய்யறது ஈசிதானே? செய்து பார்த்துட்டு கமென்ட் பண்ணுங்க.

அடுத்த மாதம் வேற ஒரு வடிவத்தில புக் மார்க் எப்டி செய்யறதுன்னு சொல்லி தரேன். 

அது வரைக்கும் சமத்தா இருக்கணும். சரியா? 

பை!  பை! டாட்டா! 

👋👋👋👋👋👋👋

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments