நம் நாட்டின் கொடி
நிலவிலும் ஏறி விட்டது!
நிலவே வா என்று சொல்லி
அழைக்க வேண்டாம் இனி,
நாமே நிலாவில் போய்
பால் சோறு உண்ணலாம்
சந்திரயான் விண்கலம்,
இறங்கி விட்டது இன்று
மிக ஒயிலாக
நிலவின் தென் திசையில்!
கை தட்டி பாடிக்
களிப்போம் ,கொண்டாடுவோம்!
வாழ்க பாரதம்! வாழ்க பல்லாண்டு!
வளர்க விஞ்ஞானம்! வாழ்க! வாழ்கவே!!