வாத்து ராஜா

சிறுவர் நாவல்

ஆசிரியர் விஷ்ணுபுரம் சரவணன்

வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை-18 

விலை ரூ 50/-

நான்காம் வகுப்பு மாணவிகளான அமுதாவும், கீர்த்தனாவும் நெருங்கிய தோழிகள். அமுதாவுக்கு ‘வாத்து ராஜா’ பற்றிய கதையைப் பாட்டி சொல்கிறார்.

வானவன் என்பவன் மக்கு ராஜா. அவனுக்கு வாத்து ராஜா என்று மக்கள் ரகசிய பட்டப் பெயர் வைத்துள்ளார்கள். அது தெரிந்தவுடன் ராஜாவுக்குக் கோபம். நாட்டில் இருக்கும் எல்லா வாத்துக்களையும் கொன்று விட்டால், தன் பட்டப் பெயருக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று ராஜா நினைக்கிறான்.

ராஜாவின் ஆணைப்படி, காவலர்கள் வீடு வீடாகச் சோதனை செய்து, எல்லா வாத்துக்களையும் கொல்கிறார்கள்.  சுந்தரி என்பவள் ஆசையாக வாத்து வளர்க்கிறாள். தன் வாத்துக்களின் மீது மையால் பூ வரைந்து, “இது வாத்து இல்லை; காட்டிலிருந்து பிடித்து வந்த வேறு ஒரு பறவை” என்று முதல் நாள் காவலர்களை ஏமாற்றுகிறாள். மறுநாள் அவர்கள் வருவதாகச் சொல்லிச் செல்கிறார்கள். 

மறுநாள் என்ன நடந்தது? சுந்தரியின் வாத்துகளும் கொல்லப்பட்டனவா?  கதையின் முடிவு என்ன என்பதை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். 9-12 வயதினர்க்கான சுவாரசியமான சிறுவர் நாவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *