பவி பாப்பா ஒரே அழுகை. “என் பொம்மையை நாய் ஒன்னு தூக்கிட்டு போயிடுச்சு. எனக்கு இப்பவே வேணும்னு” அடம் பண்ண, அம்மாவுக்கும், அப்பாவுக்கும் என்ன செய்யிறதுன்னு தெரியல.
“சரி, அதே மாதிரி வேற பொம்மை வாங்கித் தரேன்னு” சொன்னாங்க.
“எனக்கு அந்தப் பொம்ம தான் வேணும்”
“சரி நான் போலீஸ்கிட்ட சொல்லிக் கண்டுபிடிக்கச் சொல்றேன் மா”
போலீஸ் பவி அப்பாவின் நண்பர் ஆதலால் உடனே வந்து பொம்மை எங்க போயிருக்கும் என்று விசாரிசிட்டு நாளைக்குள் உன் பொம்ம உனக்குக் கிடைக்கும் அழக் கூடாதுன்னு சொல்லிட்டு போனார்.
பாப்பா அழுதுகிட்டே தூங்கி விட்டாள். திடீர்னு அவள் பொம்ம வந்து பேசுச்சு. பவி நான் இங்க சாலையோரத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனிடம் இருக்கிறேன். அவனும் உன்னைப்போலவே என்னிடம் விளையாடறான். உன்னிடம் காசு இருக்கு. நீ என்னைப்போல் நிறையப் பொம்ம வாங்கலாம், அவன்கிட்ட போட்டுக்க கூட துணி இல்ல. பார்க்கவே பாவமா இருக்கு. நான் அவன்கிட்டவே இருக்கேன்னு சொல்லுச்சு. பாப்பா கண் விழித்து யோசிக்க ஆரம்பித்தாள். அதுவரை தன்னுடைய எந்தப் பொருளையும் யாரிடமும் கொடுக்கவே மாட்டாள். இன்னும் பழைய துணி, செருப்பு, பொம்மன்னு எல்லாம் பரணில் போட்டு வச்சிருப்பது நினைவுக்கு வந்தது.
“அம்மா, போலீஸ் மாமாகிட்ட சொல்லி அந்தப் பொம்மையைக் கண்டுபிடிக்க வேணாம்னு சொல்லுங்க” என்றாள்.
“ஏன் பவி என்ன ஆச்சு?”
கனவுல பொம்ம சொன்ன விஷயங்களைச் சொன்னாள். அதோடு தன்னிடம் இருக்கும் பொம்மைகளையும், துணிகளையும் சாலையோர குழந்தைகளுக்குக் கொடுக்க ஒப்புக் கொண்டாள்.
பவியின் மாற்றத்தைக் கண்டு பெற்றோர் மனம் குளிந்தார்கள்.
என்ன குழந்தைகளே! உங்களிடம் இருக்கும் பழைய பொம்மைகள், துணிகள் எல்லாத்தையும் இல்லாதவர்களுக்கு நீங்களும் கொடுப்பீங்க தானே!
என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.