வைஷாலி செஸ் விளையாட்டில், தமிழ் நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற மூன்றாவது பெண் வீராங்கனை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீர்ர்களுக்கு இந்திய அரசால் அளிக்கப்படும் அர்ஜூனா விருது, ஜனவரி 2024 ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது.

இவர் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியாவார். சென்னை பாடியில் வசிக்கும் இவர் தந்தை ரமேஷ் பாபு, கொரட்டூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணி புரிகின்றார்.