ஹாய் குட்டீஸ்…

            எப்படி இருக்கீங்க?

            இப்போ நாம் ஓவியங்களின் வகைகளைப்பற்றிப் பார்க்கலாமா?

            ஓவியம் அப்படீன்னா ஓவியம்தான், அதில் என்ன வகைகள்? ன்னு தோணுதா? ஒரு உதாரணம் சொல்றேன் பாருங்க, சிலைகள்னு சொன்னவுடனே உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? யோசிச்சுப்பாருங்க.

            அதுவே கோயில் சிலைகள்னு சொன்னால்?

            தலைவர்களின் சிலைகள் அப்படீனா?

            கற்சிலைகள், சிமெண்டினால் ஆன சிலைகள், பொம்மை சிலைகள் இப்படி எல்லாம் பிரிச்சு பேர் கொடுத்தால் அதை உடனே நாம் உணர்ந்துக்கலாம். இது சரியான உதாரணமா என்னன்னு தெரியலை. இல்லைனா இப்படிச் சொல்லலாம், துணி ஒண்ணுதான், ஆனால் ஸ்கூல் யூனிஃபார்ம், போலீஸ்க்கு, மிலிட்டரிக்கு, அப்புறம் திருவிழா டிரஸ் இப்படி சொல்லும்போது அது ஒருபோல புரிஞ்சுக்க முடியுததா? ரைட்….  அதுபோல ஓவியமும்.

            ஓவியத்தில் பல வகை உண்டு. உருவ ஓவியம், வாட்டர்கலர் ஓவியம், அப்புறம் போஸ்டர் கலர், ஆயில் பெயிண்டிங், மாடர்ன் ஆர்ட் இன்னமும் கார்ட்டூன்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இது எல்லாம் ஓவியத்தை வரைய பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சில வகையான பொதுவான ஓவியப்பெயர்கள்.

            நான் சொல்ல வந்தது இது இல்லை.

            உலகம் முழுதும் மனிதனின் ஆரம்பகாலம் முதலே ஓவியங்கள் வரையறாங்க. அதை வரையும் ஸ்டைல் மாறிக்கொண்டே இருக்கு. ஒவ்வொரு ஓவிய வகைக்கும் ஒரு குறிப்பிட்ட பெயர் கொடுத்து பிரிப்பாங்க. அதை வரைய பயன்படுத்தும் பொருட்கள் என்ன வேணா இருக்கலாம். ஆனா ஒரு குறிப்பிட்ட ஸ்டைல் ஓவியம் என்று புரிந்துகொள்ள அந்த பெயர் உதவும். சிலதை மட்டும் இப்போ பார்க்கலாமா?

            யதார்த்த ஓவியம், ரியாலிட்டி ஓவியம் என்று சொல்வது ஒருவகை. இருப்பதை அப்படியே… அதுவும் அழகாக, வரைந்த சுவடுகூட தெரியாமல் வரைவது. நம் நாட்டில் ரவிவர்மா வரைந்த ஓவியங்கள் மிகவும் பிரபலம். மோனாலிசா ஓவியம்கூட இப்படியானதுதான்.

kirukkar 10 1

            இம்ப்ரஷனிஸம் அப்படி ஒண்ணு இருக்கு. காட்சிகளை தத்ரூபமாக இல்லாமல், வரைந்த ஓவியத்தின் பிரஷ் கோடுகள், அல்லது பதித்த சுவடுகள் அப்படியே தெரியும். ஆனாலும் பார்க்க ஒருமாதிரி அழகாக இருக்கும்.

kirukkar 10 2

            சர்ரியலிஸம்னு சொல்லப்படுவது ஆச்சரியமா இருக்கும். மனிதரின் கனவுகளைக்கூட வரைஞ்சு பார்ப்பாங்க. இதில் மனிதன் மட்டும் இல்லாமல் நாம் பயன்படுத்தும் பொருட்கள், கருவிகள் கூட ஒரு ஜீவனாக வருவதுண்டு. நல்லா கற்பனையை அள்ளிவிடலாம்.

kirukkar 10 3

            எக்ஸ்பிரஷனிஸம், வந்து எப்படி சொல்றது… ம்ம்…  நாம் கோபமா இருந்தா, சிரிச்சா அப்படியான மனித உணர்வுகளை வெளிப்படுத்த வரையும் ஓவியங்கள்.  இதில் அழுத்தமான வண்ணங்கள் கோடுகள் ரொம்ப பயன்படும்.

kirukkar 10 4

            அப்புறம் க்யூபியிஸம்னு ஒன்ணு இருக்கு. இந்த மாதிரி படங்களில் நாம் பார்க்கும் உருவங்களுக்கு கட்டம் கட்டமா க்யூப் போல, வட்டம், முக்கோணமா எல்லாம் வரைவாங்க. 3D போல இருக்கும். நேரடியா ப்ளாக்குகளை  அடுக்கியது போலவும் இருக்கும். இது ஒரு வகை.

kirukkar 10 5

            நான் சொன்னது சில வகைகள்தான். இன்னும் நிறைய ஓவிய வகைகள் இருக்கு.  இதில் ஆர்வமூட்டக்கூடிய சிலதை அடுத்த மாதம் பார்க்கலாம்.

தொடரும்…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *