
(சிறுவர் கதைகள்)
ஆசிரியர்: புவனா சந்திரசேகரன்
வெளியீடு:- பாரதி பதிப்பகம், சென்னை-92. (செல் +91 9383982930)
விலை:-ரூ115/-
இந்தத் தொகுப்பில், 10 கதைகள் உள்ளன. ‘வேர்க்கடலை இளவரசன்’ என்ற முதல் கதையில், அரசி நீண்ட காலம் தவமிருந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். குழந்தை மிகவும் குட்டியாகப் பிறக்கிறது. அரசி அதை யாருக்கும் தெரியாமல், ஒரு வேர்க்கடலைக்குள் ஒளித்து, வளர்க்கிறார். ஒரு நாள் அரசியின் பணிப்பெண் ஒருத்தி, வேர்க்கடலையைத் தூக்கி நந்தவனத்தில் வீசிவிடுகிறாள். மறுநாள் நந்தவனத்தில், ஒரு பெரிய வேர்க்கடலை மரம் முளைக்கிறது. அதற்குப் பிறகு, வேர்க்கடலை இளவரசன் என்ன ஆனான்? அவனது சாகசங்கள் யாவை? என்று தெரிந்து கொள்ள, இக்கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.
வறுமையில் உழலும், மண் அகல் விளக்கை விற்கும் வியாபாரிக்குத் தீபாவளி கொண்டாட, பணம் எங்கிருந்து கிடைத்தது? அவர் மகள் பள்ளியில் சேர்ந்து படிக்க யார் உதவினார்கள்? எப்போதும் தொலைக்காட்சி பார்த்துப் பொழுதைப் போக்கும் சோம்பேறி அரவிந்தனுக்கு, மனமாற்றம் ஏற்பட்டதற்கு என்ன காரணம்? பூச்சாண்டி என்பவன் யார்? உண்மையில் பூச்சாண்டி இருக்கிறானா? பொன்னிக்கு நிலாப் பெண் எப்படித் தோழி ஆனாள்? என்பதை எல்லாம் மீதமுள்ள கதைகள் சுவாரசியமாய் விளக்குகின்றன. 6-12 வயது குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற கதைகள். அவசியம் குழந்தைகளுக்கு வாங்கி வாசிக்கக் கொடுங்கள்.