சினிமாப் பெட்டி
ஆசிரியர்:- அப்பு சிவா
வெளியீடு:- நீலவால்குருவி, சென்னை-92- செல் 9840603499
விலை:- ரூ 50/-

இது ஒரு குறுங்கதை. துறுதுறு பையனான ரகுவுக்கு ஒரு நாள் முழங்காலில் அடி பட்டுவிடுகிறது. மருத்துவர் மாவு கட்டு போட்டுவிட்டு, ஒரு வாரம் லீவில் இருக்கச் சொல்லி விடுகிறார். இன்னும் இரண்டு நாளில் பள்ளியில் இருந்து, சினிமாவுக்கு மாணவர்களை அழைத்துப் போக ஏற்பாடாகி இருந்தது. தான் போக முடியவில்லை என்பதில், ரகுவுக்கு ரொம்ப வருத்தம்.

ரகுவின் அண்ணன் மோகன் வீட்டிலேயே அட்டைப் பெட்டியைக் கொண்டு சினிமாப் பெட்டி தயாரித்துப் படம் காட்டி, தம்பியின் வருத்தத்தைப் போக்க முயல்கிறான். நண்பர்களுடன் சேர்ந்து மோகன் என்னென்ன பொருட்களைக் கொண்டு, சினிமாப் பெட்டி தயார் செய்தான்? அதன் மூலம் எப்படிப் படம் காட்டினான்? என்பதைச் சொல்லும் கதை. 6-12 குழந்தைகளுக்கான கதை. அமேசான் கிண்டிலிலும், இந்நூல் கிடைக்கின்றது.