காலாண்டிதழாக வெளிவருகிறது இந்தச் சிறார் இதழ். இதன் எட்டாவது இதழில் குழந்தைகளிடம் ஒரு பள்ளி எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்வி கேட்டு, அதற்கு அவர்கள் கொடுத்துள்ள பதில்களை அப்படியே பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு குழந்தை சொல்லியிருக்கும் பதில் இது:-
“மேகத்தின் மீது பள்ளியிருந்தால், எனக்குப் பிடிக்கும். சலிப்பாக இருக்கும்போது, மேகங்களை வைத்து, நிறைய பொம்மைகள் செய்யலாம்”
ஒன்பதாவது இதழ், குழந்தைகளுக்கு இயற்கையைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. வண்டுகள் பற்றி திரு ஏ.சண்முகானந்தம் எழுதிய கட்டுரை, பறவை பார்த்தலுக்கு உதவும் பறவைகள் அறிமுகக் கையேடு குறித்த நூலறிமுகம் எனச் சிறப்பாக உள்ளது. திரு யூமா வாசுகி மொழி பெயர்த்த, ‘சூரியனைத் திருடிய முதலை’ என்ற கதையும், இதில் இடம்பெற்றுள்ளது.
பத்தாம் இதழை வடிவமைத்த ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மூவரும் சிறுவர்கள்! குழந்தைகள் சொன்ன கதைகளும், கதைகளுக்குக் குழந்தைகளே வரைந்த ஓவியங்களும், இந்த இதழை அலங்கரிக்கின்றன. மூன்று வயது குழந்தை சொன்ன கதையும் கூட இதில் இடம்பெற்றிருப்பது வியப்பு!
மொத்தத்தில் குழந்தைகள் விரும்பி வாசிக்கக் கூடிய புத்தகம். குழந்தைகளுக்கு அவசியம் வாங்கித் தந்து, வாசிக்கச் செய்யுங்கள்.
தனி இதழின் விலை ரூ.50/–
புத்தகம் பெற:- 9843472092 & 9605417123
https://www.facebook.com/Kuttiaagaayam/
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.