டெலஸ்கோப் மாமா சாகசங்கள் – சிறுவர் நாவல்
ஆசிரியர்:- இரா.நடராசன்
வெளியீடு:- புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை. ((8778073949)
விலை:- ₹ 70/-
வன புகைப்பட ஆர்வலர்கள் பற்றிய, தமிழின் முதல் புனைவு என்ற சிறப்பைப் பெற்ற சிறுவர் நாவலிது.வீட்டுக்குத் தெரியாமல் தன் டெலஸ்கோப் மாமாவோடு, காட்டுக்குச் சாகச பயணங்கள் மேற்கொள்கிறான், ஸ்டான்லி. அந்தப் பயணங்களில் கிடைக்கும் த்ரில்லிங் அனுபவங்களை, விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் எழுதியிருக்கிறார் ஆசிரியர் இரா. நடராசன். ஆயிஷா என்ற இவரது சிறப்பான நாவலுக்குப் பிறகு, ஆயிஷா நடராசன் என்றே இவர் தற்போது பரவலாக அறியப்படுகின்றார்.
குரங்குச் சண்டை, வெளவால் துரத்துதல், வீட்டுக்குப் பின்னால், உடும்பு வளர்ப்பு, யானை மேய்ச்சல் என்ற ஸ்டான்லியின் சாகச அனுபவங்கள், வாசிக்கும் அனைவருக்கும், இயற்கையின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்த வல்லவை. .
இந்த நாவலை வாசிக்கும் ஒவ்வொரு சிறுவனும், இது போல் தனக்கும் ஒரு டெலஸ்கோப் மாமா இருந்தால், நன்றாகயிருக்குமே என ஏங்க வைக்கும் வைக்கும் அளவுக்கு அந்த மாமா சுவாரசியமான கதாபாத்திரம்..
விறுவிறுப்பான சாகச சிறார் நாவலை, அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.