‘முதல்ல ஸ்கூல்க்கு போனதும்.. ஹாண்ட் சானிடைசர் போட்டுக்கணும்.. ’

வெரி குட்..

‘ரொம்ப போடக்கூடாதுப்பா.. சும்மா ஒரு துளி ரெண்டு துளி..அப்பா உங்களுக்கு தெரியுமா.. ஹான்ட் சானிடைசர் போட்டுக்கிட்டு கண்ணுல வைக்கக்கூடாதாம்… கண்ணெல்லாம் சிகப்பாகி எரியுமாம்.. அம்மா போன்ல நம்ம வாட்டசாப் க்ரூப்ல வந்துச்சே,ப்பா!’ என்றாள்.

‘ப்ரகல்யா பாட்டி .. பார்வேர்ட் மெசேஜ் படிக்கிற அளவுக்கு தெறிட்டீங்களா… என்றபடி அவளிடம்

‘சரி, ஏன் ஹாண்ட் சானிடைசர்  கண்ணுல படக்கூடாதுன்னு தெரியுமா?’ என்று கேட்டார்..

‘அது தெரியாதே.. !’

‘ம்ம்.. முதல்ல எந்த ஒரு செய்தி படிச்சாலும் அது நல்லதே நமக்கு சொன்னாலும் ஏன் எதுக்குன்னு யோசிச்சு பார்த்து அது நமக்கு உபயோகமானதா அப்படின்னு பொருத்தி பாத்துக்கணும்.. இப்போ கடைகள்ல பொதுவா கிடைக்கிற பெருமபாலான ஹாண்ட் சானிடைசர்ல கிருமிகளை கொல்லும் கெமிக்கல் பொருளான ஆல்கஹால் இருக்கு. இது நேரடியா கண்கள்ல படும்போது கண்ணெரிச்சல் வரும். அதிக அளவுல பட்டா, கண்களுக்கு நிறைய பாதிப்புகள் வரலாம். அதனால தான் ஹாண்ட் சானிடைசர கண்கள் கிட்டயோ எதிராகவோ படும்படி பயன்படுத்தக்கூடாது.. புரிஞ்சுதா. ‘

நல்லாவே புரிஞ்சுதுப்பா..

சரி அடுத்த என்ன முடிவு பண்ணியிருக்கீங்க/..

ம்ம்.. அடுத்து.. அடுத்து.. ஆஹ்.. எங்க டீச்சர்ஸ் எல்லாருக்கும் ஒரு வெல்கம் பாட்டு பாடப்போறோம்.. பாட்டெல்லாம் ரெடி..

அடடே சூப்பர்.. அதுக்கப்புறம்..

அதுக்கப்புறம்  நம்ம சின்னு இருக்கான்லப்பா..

யாரும்மா

அதான்ப்பா நாங்க நாலாவது படிக்கும் போது எங்க கூட இருந்தானே..

ஓ ஆமா.. அந்த பையன் தான் ஸ்கூலை விட்டு நின்னுட்டதா சொன்னியே..

ஆமாப்பா.. அவனால ஸ்கூலுக்கு வர முடியாதாம்.. கொரோனா வந்தப்போ அவங்க அப்பாவுக்கு வேலைப்போயிருச்சாம்..

சரி அதுக்கு..

கொரோனா வந்ததுக்கு பாவம் அவன் என்னப்பா பண்ணுவான்.. அதனால நான் மது அக்ஷரா மூணு பெரும் அவனுக்கு மெசேஜ்ல இவ்வளவு நாள் தனி தனியா நாங்க படிக்கிறத அவனுக்கு அனுப்பி சேர்ந்து படிப்போம்.. இப்போ நேர்ல பார்த்து ஒவ்வொரு நாள் எங்களோட ஒவ்வொரு புத்தகத்தை அவனோட ஷேர் பண்ணிக்கலாம்ன்னு இருக்கோம். அதனால இன்னைக்கு சாயங்காலம் நம்ம ஸ்கூல் பக்கத்துல இருக்கிற கௌரி அத்தை கடைக்கு அவனை வர சொல்லிருக்கோம்ப்பா என்றாள்.

karkai

கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி கண்மூடி திறக்கும் ஒரு நொடியில் எத்தனை பேரது வாழ்வில் எத்தனை பெரிய மாற்றங்களை உருவாக்கிரியிருக்கிறது என்பதை ஒரு கணம் யோசித்து பார்த்த அம்மாவும் அப்பாவும் ப்ரகல்யாவை கைகொடுத்து ஆரத்தழுவி,

நீங்க எடுத்த முடிவுலயே இது தான் குட்டி மிக மிக சிறப்பான முடிவு.. ஒரு சின்ன வேண்டுகோள். நீங்க சின்னு கிட்ட பேசும் போது, அவனுக்கு படிக்க என்ன வேணும்ன்னு நண்பர்கள் நீங்க கேட்டு சொன்னீங்கன்னா அம்மாவும் அப்பாவும் எங்க நண்பர்களோட பேசி சின்னுவுக்கு  தேவையானதை செய்ய முயற்சிப்போம்… கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுங்களேன்’ என்றார் அப்பா..

‘ஹய்யா .. முடிவு கிராண்டெட்.. என்று சந்தோஷமாக அம்மாவையும் அப்பாவையும் முத்தமிட்டு அறையை விட்டு பறந்து போனாள் ப்ரகல்யா.

சிறகடிக்கும் பட்டாம்பூச்சியின் வண்ணத்தில் வானவில்லாய் மனம் நிறைந்துக்கொள்ள   உள்ளூர குதூகலித்தார்கள் அம்மாவும் அப்பாவும்!

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments