ஆறு முதல் அறுபது வரை
ஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்
தொட்டிலில் ஆடிய காலந்தனை
மலரும் நினைவாய் மீட்டெடுக்கும்
ஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்
ஆடிக் களித்து மகிழ்ந்திடுவோம்
உந்தி உந்தி ஆடிடலாம்
உயரே உயரே எழும்பிடலாம்
பாடல் பாடியும் ஆடிடலாம்
பேசிச் சிரித்தும் களித்திடலாம்
நின்று கொண்டும் ஆடிடலாம்,
அமர்ந்து கொண்டும் ஆடிடலாம்
கண் சொக்கு கின்ற வேளையிலே
படுத்துத் தூக்கம் போட்டிடலாம்
ஏற்றம் ஒன்று உள்ளதென்றால்
இறக்கமும் தானாய் வருமெனவே
ஊஞ்சல் சொல்லும் பாடந்தனை
கருத்தாய் நாமும் கற்றிடுவோம்
ஊஞ்சலில் ஆடுவோம் வாருங்கள்
ஆடிக் களித்து மகிழ்ந்திடுவோம்
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.