fathima beevi

பாத்திமா பீவி கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டாவில் ஏப்ரல் 30, 1927இல் பிறந்தார். மீரா சாகிபும் கதீஜா பீபியும் இவரது பெற்றோர்களாவர். பத்தனம்திட்டையில் உள்ள கத்தோலிகேட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வி பெற்றார். தமது அறிவியல் இளங்கலை பட்டப் படிப்பை திருவனந்தபுரத்தில் உள்ள யூனிவர்சிட்டி கல்லூரியில் படித்தார். சட்ட இளங்கலைப் பட்டப் படிப்பைத் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பயின்றார்.

பாத்திமா, ஓர் வழக்கறிஞராக நவம்பர் 14, 1950இல் பதிந்து கொண்டார். கேரளாவின் கீழ் நிலை நீதி மன்றங்களில் தமது பணிவாழ்வைத் துவங்கினார். மே, 1958இல் கேரள கீழ்நிலை நீதித்துறை பணியில் முனிசீப்பாக நியமிக்கப்பட்டார். 1968இல் துணை நீதிபதியாக பதவியேற்றம் பெற்றார்.1972இல் முதன்மை நீதித்துறை மாஜிஸ்ட்ரேட்டாக உயர்வு பெற்றார். இரண்டாண்டுகளிலேயே 1974இல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

ஜனவரி 1980இல் வருமானவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் நீதித்துறை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் 4, 1983இல் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நீதியரசர் எம். பாத்திமா பீவி (Justice M. Fathima Beevi) இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதியரசர் ஆவார். 1989 இல் உயர்ந்த நீதித்துறை பதவிகளை ஏற்ற முதல் முஸ்லிம் பெண்மணியாகவும் விளங்கினார். இந்தியா மட்டுமன்றி ஆசியாவிலேயே மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும் உடையவர். தமது பணி ஓய்விற்குப் பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஒரு உறுப்பினராகவும் 1997 முதல் 2001 வரை தமிழ்நாடு ஆளுநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *