‘துளிர், ’கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழில் வெளியாகும் சிறுவர் அறிவியல் மாத இதழ். ஆங்கிலத்தில் ஜந்தர் மந்தர் என்ற பெயரில் இதே இதழைக் கொண்டு வருகின்றனர். துளிர் இதழின் விலை ரூ பத்து மட்டுமே.  ஆண்டுச்சந்தா ரூ 100/-.

அட்டையில் நுண்ணுயிரியலின் தந்தை எனப் புகழப்படும் லெய்வன்ஹூக் அவர்களின் படம்’ உள்ளே, அவர் ஆராய்ச்சிகள் பற்றிய ஒரு சிறப்புக் கட்டுரை;  காடுகளை அழித்து, யானைகளின் வழித்தடத்தை அழித்ததால், உணவுக்காகவும், நீருக்காகவும் ஊருக்குள் வரும் யானைகளுக்கும் மனிதனுக்கும் இடையேயான பிரச்சினைகள் பற்றி ஒரு கட்டுரை அலசுகிறது.

நாடோடி எறும்புகள், மிக நீளமான குச்சிப்பூச்சி ஆகியவை குறித்த கட்டுரைகள், சூரியக் கிரகணத்தைப் பற்றிய அறிவியல் விளக்கம், கிரகணத்தைக் குறித்து நிலவும் மூடநம்பிக்கைகள், மீன்கொத்திப் பறவையின் மூக்கு டெக்னாலஜியை புல்லட் ரயிலுக்குப் பயன்படுத்தியிருக்கும் செய்தி எனச் சிறுவர்களுக்கு அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தத் தூண்டும் சிறப்பான கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. 

சிறுவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய இதழ் துளிர்.  

தொடர்பு கொள்ள:
மின்னஞ்சல்: thulirmagazine@gmail.com
கைபேசி எண்: +91-9994368501
M.J. பிரபாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *